வணக்கம்!
கடவுளும் ஒரு இடத்தில் வருகிறார் அதே இடத்தில் உங்களுடைய குருவும் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம் முதலில் நீங்கள் யாரை சந்திப்பீர்கள் ?
நானாக இருந்தால் முதலில் குருவை சந்திப்பேன். எல்லோரும் இந்த பதிலை தரமுடியும் ஆனால் இதனை நடைமுறைப்படுத்த கண்டிப்பாக முடியாது. நமது மனம் அப்படி இருக்கும். கலியுகத்தில் மனிதனின் மனம் சிக்கலில் தான் இருக்கும்.
தொட்டு காண்பிக்கும் குரு தான் அனைத்திலும் முதன்மையானவர். குரு இல்லை என்றால் எதுவும் நடக்காது. குருவின் திருவடியை தான் நாம் முதலில் வணங்கவேண்டும். அதன் பிறகு கடவுளின் திருவடியை தொழவேண்டும்.
குருவை அடிக்கடி சந்திக்கவேண்டும். நமது வேலை காரணமாக அடிக்கடி சந்திக்கமுடியவில்லை நாம் வெளியில் இருந்தால் குரு இருக்கும் ஊருக்கு நாம் சென்றால் முதலில் அவரை போய் சந்தித்துவிட்டு அதன் பிறகு எல்லா வேலையும் செய்யவேண்டும்.
குரு சிஷ்யனின் சந்திப்பு இருந்தால் தான் உங்களின் ஆத்மாவிற்க்கு எது தேவை என்பதையறிந்து குரு உங்களின் ஆத்மாவிற்க்கு கொடுக்கமுடியும். இதனை எந்த காலத்திலும் நீங்கள் மறவாமல் இருந்தால் ஆன்மீகம் எளிது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment