வணக்கம்!
சோதிடத்தில் ஆறாவது வீட்டைப்பற்றி பார்த்து வருகிறோம். ஆறாவது வீடு பலம் பெறும்பொழுது அதிகப்பட்சம் ஏழாவது வீடு பலம் இழக்க ஆரம்பித்துவிடும். பொதுவான தகவலை சொல்லுகிறேன் ஆறாவது வீடு பலன் பெற்றுவிட்டால் ஏழாவது வீடு பலன் இழக்கிறது என்பது பல ஜாதகத்தில் பார்த்து இருக்கிறேன்.
ஆறாவது பலன் பெற்றுவிட்டால் அவர்களுக்கு அமையும் துணை கொஞ்சம் நன்றாக அமையாது. நன்றாக அமையாது என்பது அவர்க்கு பிடிக்காமல் இருப்பதற்க்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஒரு வித மனகசப்பு இருவருக்கும் ஏற்படும்.
மறைவு ஸ்தானம் பலப்படும் ஆள்கள் அனைவரும் வெளியிடத்தில் ஒரு மறைமுகமான ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு இருப்பார்கள். கடைசி வரை இப்படி தொடர்பு இருந்துக்கொண்டே இருக்கும்.
நான் பார்த்த வரை அரசியல்வாதிகளுக்கு ஆறாவது வீடு நல்ல பலன் பெற்று இருக்கின்றது. இவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு மறைமுக தொடர்பை வைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஒரு சில காலத்தில் இது பிரச்சினையும் தருவதாக அமைவது உண்டு.
அரசியல்வாதிகள் என்றால் அது பெரிய அளவில் இருக்கவேண்டும் என்பது கூடகிடையாது. ஒரு வார்டு மெம்பர் கூட இப்படிப்பட்ட தொடர்பை வைத்துக்கொண்டு இருக்கின்றனர். அவர் அவர்களுக்கு உள்ள பலத்தை பொறுத்து இது அமைகிறது.
பெரும்பாலும் மறைவுஸ்தானங்கள் பலப்படாமல் இருந்தால் நல்ல இல்லறவாழ்க்கை அமையும். பலப்பட்டால் வெளிதொடர்பு ஏற்பட்டு இல்லறத்தில் அமைதி குறையும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment