வணக்கம்!
ஆறில் புதன் கிரகம் இருந்தால் படிப்பு என்பது கொஞ்சம் வராது. அனுபவ அறிவு உள்ளவரை அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஆறாவது வீடாக புதன்கிரகம் சம்பந்தப்பட்டால் அவரின் நடவடிக்கை எழுத்து வழியாக அடுத்தவரை ஏமாற்றி பிழைப்பார்கள்.
எழுத்து வழியாக அடுத்தவரை ஏமாற்றுபவது என்றால் ஏதாவது பத்திரம் எழுதி அதனை அவரின் பேருக்கு வைத்துக்கொள்வார். நிலபத்திர மோசடி எல்லாம் நடந்தது அல்லவா அது எல்லாம் இதில் வரும்.
இன்றைக்கு நடக்கும் அனைத்து எழுத்துபூர்வமாக நடைபெறும் பித்தலாட்டம் அனைத்தும் புதன் ஆறாவது வீட்டிற்க்கு சம்பந்தப்பட்டதாக இருக்கும். ஆறாவது வீடு என்றவுடன் அறிவு வேலை செய்வது வித்தியாசமாக இருக்கின்றது.
புத்தியை கொடுக்கும் புதன் மறைவு ஸ்தானத்தில் நிற்பதால் அவர்களுக்கு புத்தி அப்படி வேலை செய்கிறது. இவர்களுக்கு வரும் வியாதி தோல்வியாதி என்று சொல்லுவதைவிட இரத்தத்தில் பிரச்சினை என்று சொல்லலாம். இரத்தத்தில் பிரச்சினை என்பதால் தான் இவர்களுக்கு வரும் வியாதி தோல்வியாதியாக இருக்கலாம்.
இவர்கள் சாப்பிடும் சாப்பாடு கூட வெளியில் தான் வாங்கி சாப்பிடுவார்கள். உணவங்களில் உள்ள உணவை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். செரிமானமும் நன்றாக இருக்கும். வயதிற்க்கு தகுந்தார் போல் சாப்பாட்டை சாப்பிட்டுக்கொள்ளுங்கள்.
கடன் கொடுத்தால் இவர்களிடம் இருந்து திரும்பி வாங்கமுடியாது. ஒரு சிலர் மட்டும் திருப்பிக்கொடுப்பார்கள். பலர் கடனை திருப்பிக்கொடுக்கமாட்டார்கள். ஒரு சிலர் அரசாங்கவழியில் எப்படி செயல்பட்டால் கடனை வாங்கலாம் என்று தெரிந்து வைத்திருப்பார்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment