Followers

Friday, August 11, 2017

ஏதோ பிறந்தோம் ஏதோ வாழ்ந்தோம்


ணக்கம்!
          ஆடி மாதத்தில் அனைவரையும் தங்களின் பங்களிப்பை அளியுங்கள் என்று வருடந்தோறும் சொல்லுவது உண்டு. இதனை வருடந்தோறும் நமது நண்பர்கள் செலுத்துவார்கள். இந்த வருடம் கொஞ்சம் குறைவாகவே இதனை செலுத்தியிருக்கின்றார்கள்.

எந்த ஒரு வேலையிலும் என்னை தான் அதிகம் சோதித்து பார்ப்பேன். என்னுடைய தவறு எங்கு இருக்கின்றது என்பதை பார்த்து அதனை திருத்த பார்ப்பேன். என் பக்கம் தவறு இருப்பது போல் தெரியவில்லை மாறாக நமது நண்பர்கள் அதிக பற்றாக்குறை வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.

அபரிதமான வளர்ச்சியை அடைவதற்க்கு தான் பல வருடங்கள் ஜாதக கதம்பத்தில் எழுதிவருகிறேன். இதனை எல்லாம் உங்களின் வாழ்க்கையில் நீங்கள் பயன்படுத்தினால் மட்டுமே அனைத்தும் சாத்தியப்படும்.

பல பதிவுகளில் நான் சொல்லிருக்கிறேன். எந்த நிலையிலும் ஒருவர் சாேரம் போன மாதிரி வாழ்ந்துவிடகூடாது. அதாவது உருப்படாமல் போய்விடகூடாது. எப்படியாவது முன்னேற்றம் அடைந்துவிடவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

பணத்தை பெரியளவில் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருந்தால் அது உங்களை தூங்கவிடாமல் துரத்திக்கொண்டே சென்று அதனை அடையவைக்கும். ஏதோ பிறந்தோம் ஏதோ வாழ்ந்தோம் என்று இருந்துவிடகூடாது. பிறந்தோம் நன்றாக வாழ்ந்தோம் என்று இருக்கவேண்டும். 

பணம் அனுப்பவில்லை என்ற கோபம் கிடையாது. அனைவரையும் எனக்கு தெரியும் பணம் கையில் இல்லை அதாவது பற்றாக்குறை வாழ்க்கையில் இருக்கின்றீர்கள் என்று சொல்லுகிறேன்.

விரைவில் அம்மன் பூஜை நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: