Followers

Tuesday, August 1, 2017

ஆலய தரிசனம் :: மன்னை இராஜகோபாலசுவாமி



வணக்கம்!
          பரிகாரம் முடிந்தபிறகு ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வரவேண்டும் என்பது நமது வழக்கம். நேற்று மன்னார்குடிக்கு ஒரு வேலை காரணமாக சென்றேன். மன்னார்குடி சென்ற பிறகு மன்னார்குடி பெரிய கோவிலை தரிசனம் செய்துவிடலாம் என்று சென்றுவிட்டேன். 

வருடம் ஒரு முறையாவது மன்னார்குடி இராஜகாேபாலனை தரிசனம் செய்துவிடுவது உண்டு. இந்த முறை கொஞ்சம் கால தாமதத்திற்க்கு பிறகு தரிசனம் செய்துவிட்டேன். நல்ல தரிசனம் என்று தான் சொல்லவேண்டும். 

கோவிலில் இருந்து வாட்ஸ்அப்பில் நமது நண்பர்களுக்கும் படங்களை அனுப்பி வைத்தேன். அவர்களும் தன்னுடைய வேண்டுதலை வைக்குமாறு சொன்னார்கள். அவர்களுக்காகவும் பிராத்தனை செய்தேன். மதியம் நடைசாத்திய பிறகு தான் வெளியில் வந்தேன்.

இந்த கோவிலில் நாம் தரிசனம் செய்தால் நல்ல நிம்மதியை உணரலாம். நம்முடைய மனசு எந்தவித கவலையும் இன்றி இருக்கும். மனதிற்க்குள் ஒரு சந்தோஷம் இருந்துக்கொண்டே இருக்கும். இதற்க்காக தான் இந்த கோவிலுக்கு நான் செல்வது உண்டு.

பழைமையான கட்டகலை கோவிலுக்குள் நீங்கள் சென்றாலே உங்களின் மனம் அதுவாகவே கழண்டு சென்றுவிடும். உங்களின் ஆத்மாவிற்க்கு அப்படி ஒரு ஆனந்தத்தை அள்ளிக்கொடுப்பார்கள் செங்கமலதாயாரும் இராஜாகோபாலனும்.  மன்னார்குடிக்கு சென்றால் ஒரு முறை சென்று பாருங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: