வணக்கம்!
நாம் சாப்பிடும் உணவை செரிக்க வைக்க இந்த சோதிடத்தில் ஆறாவது வீடு ஒழுங்காக வேலை செய்யவேண்டும். ஆறாவது வீடு நன்றாக வேலை செய்தால் மட்டுமே ஜீரணம் நன்றாக இருக்கும். உடலில் ஜீரணம் நன்றாக நடைபெற்றால் நோய் வருவதற்க்கு வாய்ப்பு குறைவு.
நமது உடல் அவ்வப்பொழுது ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் அல்லது வருடத்திற்க்கு ஒரு முறையாவது ஜீரணம் ஒழுங்காக நடைபெறாது. அந்த நேரத்தில் நமக்கு மிகவும் கடினமாக இருக்கும். இளமையாக இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை இருப்பதற்க்கு வாய்ப்பு இல்லை. வயது ஏற ஏற இது தலைதூக்க ஆரம்பித்துவிடும்.
செரிமான சக்தி வயது ஏற ஏற குறைய தொடங்கிவிடுகிறது. இதுவே நோய் வருவதற்க்கு காரணமாகிவிடும். வயது ஏறியவுடன் செரிமானம் நன்றாக நடைபெறுவதற்க்கு வழி என்ன என்பதை தெரிந்துக்கொள்ளவேண்டும்.
இயற்கையான முறையில் நல்ல செரிமானத்தை தந்து நன்றாக உடலை வைத்துக்கொள்ள இயற்கையான முறையை கையாளுங்கள். உங்களின் உடல் நல்ல செரிமானம் நடக்கும். ஆறாவது வீடு நோயை கொடுக்கவிடாமல் செய்தாலே போதும். நோயிற்க்கு மாற்றாக செரிமானத்தை செயல்படுத்தினாலே போதும் நீண்ட ஆயுளை பெறலாம்.
ஜாதகத்தை பொறுத்தவரை ஒரு வீட்டில் ஒரு பகுதியை மட்டும் நன்றாக வேலை செய்ய வைத்துவிட்டால் மீதியுள்ள பகுதி தலைதூக்காமல் இருக்கும். இது ஒரு புத்திசாலிதனமான ஒரு வேலை தான். நீங்கள் இதனை செய்து நீண்டஆயுளை பெறுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
2 comments:
வணக்கம். நம் குடலில் செரிமானத்திற்கு உதவும் Lite Hcl அமிலம் உள்ளது. நாம் அதில் உணவு போடும் முன்னும் பின்னும் அல்லது நடுவிலோ நீர் H2O கலந்தால் அந்த அமிலம் அப்போதைக்கு நீர்த்து போய்விடும். அதனால் செரிமானம் தடைபடும் அல்லது சீராக இராது. சாப்பிட்ட முன்னறும் பின்னறும் 45 Mins. நீர் அருந்தாமல் இருந்தாலே உடல் நன்றாக இருக்கும்.
true
Post a Comment