Followers

Sunday, August 6, 2017

சோதிட அனுபவம் : கடன்


வணக்கம்!
         மேலே ஒரு உதாரண ஜாதகத்தை கொடுத்திருக்கிறேன். இது ஒரு ஆண் பையனின் ஜாதகம். இவர் மகரலக்கினத்தை கொண்டவராக இருக்கிறார். லக்கினாபதி ஒன்பதாவது வீட்டில் சென்று கன்னி ராசியில் அமர்ந்திருக்கிறார்.

லக்கினத்தில் ஆறாவது வீட்டு அதிபதியான புதன் அமர்ந்திருக்கிறார். புதனும் சனியும் பரிவர்த்தனையாகி இருக்கின்றது. லக்கினாதிபதி பாக்கியஸ்தான அதிபதி மற்றும் ஆறாவது வீட்டு அதிபதியாக சம்பந்தப்படுகின்றனர்.

சனிக்கிரகம் செவ்வாய் மற்றும் சந்திரனோடு அமர்ந்திருக்கிறார். ஆறாவது வீட்டில் ராகு அமர்ந்திருக்கிறார். இவர்க்கு படிக்கும் காலத்தில் ராகு தசா நடைபெற ஆரம்பித்தது. ராகு தசாவில் படிப்பது முழுவதும் அமைந்திருந்தது. புதன் ராசி அதிபதியாக இருந்த காரணத்தால் கொஞ்சம் மூளை வேலை செய்யும் அல்லவா. படிப்பு நன்றாக வந்தது.

பொதுவாக புதனின் ராசியான மிதுனம் மற்றும் கன்னி ராசியினர் எப்படியும் படித்துவிடுவார்கள். புதனின் அறிவு என்பது இவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும் என்பதால் இவர்கள் அறிவாளிகள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

இவருக்கு படிப்பிற்க்கு செய்யும் செலவு எல்லாம் அவரின் தந்தை கடன் வாங்கி தான் செய்ய வேண்டியதிருந்தது. ராகு தசா ஆறாவது வீட்டில் இருந்து நடைபெற்ற காரணத்தால் இவருக்கு படிப்புக்கு காலத்தில் கடன் ஏற்பட்டது. ஆறாவது வீட்டு அதிபதி லக்கினத்தில் அமரும்பொழுது கடன் இருந்துக்கொண்டு இருக்கும்.

ராகு புதனின் ராசியில் இருப்பதால் அதன் பலனை கொடுக்க ஆரம்பித்தது. புதன் படிப்பையும் கொடுத்து அதோடு கடனையும் வாங்கி படிக்கும் நிலைக்கு தள்ளியது. தந்தை ஸ்தானத்தை குறிக்கும் கிரகம் சூரியன் அது இரண்டாவது வீட்டில் இருந்து காரணத்தால் தந்தை வழியில் இருந்து தான் பணஉதவியை பெறமுடியும்.

சூரியன் சனியின் வீட்டிற்க்கு சென்றால் அந்தளவுக்கு செயல்படாமல் செய்ய வைக்கும். தந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். தந்தைக்கு கடனை வாங்கும் நிலையில் இருந்தால் அவர் எப்படி உயர்நிலையில் இருக்க முடியும். கஷ்டத்தை தான் கொடுத்தது. 

படிக்கும் காலத்தில் இந்த இளைஞர் கொஞ்ச காலம் மாமனின் வீட்டிலும் தங்கி படிக்கும் நிலையில் இருந்தார். புதன் மாமாவை குறிக்கும் கிரகம் என்பதால் அதோடு ராகு தசாவில் தன் வீட்டில் இருந்து பிரித்து வைக்கும் அல்லவா. அதனால் இவர் மாமாவின் வீட்டில் தங்கி படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஆறாவது வீட்டிற்க்கு சனி மற்றும் குருவின் பார்வை கிடைக்கிறது. ராகுவிற்க்கு இந்த இரண்டின் கிரகத்தின் பார்வை கிடைக்கிறது. ராகு தசா ஒரளவுக்கு நல்லதையும் ஒரளவுக்கு கெடுதலையும் செய்யும் என்று சொல்லலாம். பணம் கேட்ட இடத்தில் கிடைக்க குரு வழி செய்வார். கொஞ்சம் கெடுதலாக பணத்தை கொடுக்கும் வட்டி கும்பலிடத்திலும் பணம் வாங்கியிருந்தார்.

குரு தசா ஆரம்பித்த பிறகு இந்த பையன் ஒரு வேலைக்கு சேர்ந்து அந்த கடனை எல்லாம் அடைத்துவிட்டார். குரு தசா இவருக்கு பணத்தை நன்றாகவே கொடுத்தது. குரு தசா பூர்வபுண்ணியம் போல பெரும்பாலும் செயல்பட்டுவிடும். புண்ணியத்தை எல்லாம் எடுத்துக்கொடுத்து அவரை நன்றாக வாழ வைக்கும். ஒரு அமைதியான வாழ்க்கைக்கு வழிகாட்டுவது குரு தசாவின் வேலை

கடனைப்பற்றி சொல்லுவதற்க்கு தான் இந்த ஜாதகத்தை கையில் எடுத்து சொன்னேன். முழுமையாக ஆராய்ந்து சொல்லவில்லை. நமக்கு எது தேவையோ அதனை சொன்னேன். கடன் என்பது கிரகங்களின் உதவி இல்லாமல் வராது. அதனை தீர்ப்பதற்க்கும் கிரகங்கள் தான் வழி செய்யும்.

ராகு தசாவிற்க்கு மட்டும் பரிகாரத்தை பரிந்துரை செய்து செய்திருந்தால் அதிகப்படியான கடன் ஏற்படுவதையும் பல சிக்கல்கள் வராமல் இருப்பதற்க்கும் வழி செய்திருக்கலாம். ஏன் என்றால் தசாநாதன் பல வேலைகளை செய்துவிட்டுவிடுவார். தசாநாதனின் வேகத்தை குறைத்தால் நல்லது நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: