வணக்கம்!
பொதுவாக நாம் காணும் கனவில் நம்மை ஒருத்தர் துரத்தினால் நம்மால் ஓடமுடியாது. அதே போல நாம் தேர்வு எழுதினால் அந்த தேர்வுக்கு ஒரு கேள்விக்கும் விடை என்பது எழுதவே முடியாது. இது அனைவரு்க்கும் நடக்கும் பொதுவான ஒரு கனவு.
பனிரெண்டாவது வீடு நமக்கு ஏற்படுத்தகூடிய கனவுகளை காட்டக்கூடிய ஒரு வீடு. அந்த வீட்டு அதிபதியை பொறுத்து நமக்கு கனவு ஏற்படும். இதே அதிபதி தான் நமக்கு ஏற்படும் விரையத்தை காட்டக்கூடிய ஒரு வீடு.
உங்களின் கனவை பொறுத்து உங்களுக்கு நடைபெறும் சம்பவமும் இருக்கும். அதாவது கனவில் கண்டது உண்மையில் நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வாக பெரும்பாலும் நடைபெற்றுவிடுகிறது.
கனவில் விரையும் ஏற்படும்பொழுது உங்களுக்கு விரையும் என்பது ஏற்பட்டுவிடும். திடீர் என்று செலவு ஏற்பட்டுவிட்டால் அந்த நேரத்தில் உங்களால் கடனை வாங்கி தான் சமாளிக்கமுடியும். பனிரெண்டாவது வீடு வேலையை காட்டும்பொழுது ஆறாவது வீடு தன்னாலே செயல்பட ஆரம்பித்துவிடும்.
ஆன்மீகத்தில் ஒன்றைச்சொல்லுவார்கள். அதாவது ஒருவருக்கு கனவு என்பது ஏற்படவே கூடாது என்பார்கள். ஆன்மீகத்தில் கனவு என்பது வராமல் இருக்க பயிற்சிக்கொடுப்பார்கள். அதனை நீங்கள் கற்றால் பெரும்பாலும் திடீர் செலவுகளை குறைக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment