வணக்கம்!
சூரியன் என்ற கிரகத்தை பார்த்து நாம் ஜாதகத்தில் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஒரு நல்ல சோதிடர்களாக இருந்தால் சூரியனையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பலனை சொல்லவேண்டும்.
சூரியனை ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றால் இன்று நாம் அரசாங்கத்தை நம்பி தான் நிறைய செய்யவேண்டியுள்ளது. உதாரணத்திற்க்கு ஒரு குடும்ப அட்டை தொலைந்துவிட்டால் அதனை நாம் திரும்ப பெறவேண்டும் என்றால் அதற்கு அந்தளவுக்கு அலையவேண்டும்.
ஏதோ ஒரு காரணத்திற்க்காக நமது குடும்ப அட்டை தொலைந்து அதனை நாம் பெறுவதற்க்கு விண்ணப்பித்து உடனே கிடைத்தால் நமக்கு சூரியன் நன்றாக இருக்கின்றது என்று அர்த்தம். சூரியன் தந்தையை மட்டும் காண்பிக்ககூடிய ஒரு கிரக மட்டும் அல்ல அது நமது ஆத்மாவையும் காண்பிக்ககூடிய கிரகம்.
நமது உடலில் உள்ள ஆத்மா எப்படி இருக்கின்றது அது பலம் வாய்ந்த ஒன்றா அல்லது பலம் இல்லாமல் இருக்கின்றதா என்பதை எல்லாம் பார்ப்பதற்க்கும் சூரியன் என்ற கிரகம் முக்கியமான ஒன்று.
இன்று அரசாங்கத்தை வைத்து சம்பாதிப்பவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அரசாங்கத்தை நம்பி பிழைக்கும் அத்தனை பேருக்கும் சூரியன் ஜாதகத்தில் நன்றாக இருக்கும்.
இன்றைக்கு அப்பன் வழி உறவுகள் எல்லாம் நம்மை வைத்து செய்து அனுப்பி விடுகிறார்கள் என்று சொல்லுகிறோம் அல்லவா. சொத்து எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு செல்கின்றார்கள் அல்லவா அவர்களுக்கு கூட சூரியன் ஜாதகத்தில் சரியில்லை என்று தான் அர்த்தம்.
அரசியல்வாதிகளுக்கு சூரியன் நன்றாக அமைந்தால் கூட சூரியன் அமையும் வீடு கொஞ்சம் வில்லங்க வீடாக இருந்தால் அரசாங்கத்தை கொள்ளை அடிப்பவர்களாக இருப்பார்கள்.
நவராத்திரி ஹோமத்திற்க்கு புக் செய்பவர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும்.
சென்னையில் உள்ளவர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Need to contact in chennai please share your contact no
Post a Comment