வணக்கம்!
ஆன்மீக முறைகளில் என்ன தான் நிறைய நீங்கள் பின்பற்றினாலும் அதாவது கோவில்கள் என்று அலைந்தாலும் உங்களின் வீடு நன்றாக இருக்கும்பொழுது தான் அனைத்திலும் எளிதாக முன்னேற்றம் அடைய முடியும்.
உங்களின் வீட்டில் எப்பொழுதும் அமைதி நிலவ வேண்டும் அதோடு தெய்வ சக்திகள் உங்களின் வீட்டில் வாசம் செய்வது போல இருந்தால் தான் அனைத்தும் நடக்கும். வீட்டில் தெய்வங்கள் வாசம் செய்ய என்ன வழி என்று நிறைய படித்து இருப்பீர்கள் அதனை செய்யுங்கள்.
உங்களின் வீட்டில் சாஸ்திர விசங்கள் எதனையும் செய்தாலும் உங்களின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அமைதியாக இருக்கவேண்டும். எந்த நேரமும் சண்டை சச்சரவு இருந்தால் உங்களின் குடும்பத்தில் எந்த ஒரு தெய்வசக்தியும் வரவே வராது.
ஒரு சில குடும்பங்களில் மனைவி கணவன் எப்பொழுது வருவன் என்று காத்து இருப்பார்கள். எதற்கு காத்திருக்கிறார்கள் அவரே சண்டை போடலாம் என்று காத்திருப்பார்கள். வேலைக்கு சென்றவர் வீடு திரும்பினால் உடனே ஆரம்பித்துவிடுவது உண்டு.
வீடு என்று இருந்தால் சண்டை என்பது இருக்கதான் செய்யும் ஆனால் அது தொடர்ச்சியாக இருந்துவிடகூடாது. என்றோ ஒரு நாள் சண்டை போட்டால் போதும் என்று விட்டுவிட்டு அமைதியாகிவிடவேண்டும்.
வீட்டில் அமைதியாக இருந்து வீட்டில் ஒரு காமாட்சி விளக்கை ஏற்றி ஊதுவத்தியை ஏற்றி வைத்தாலே போதும் அனைத்து தெய்வங்களும் உங்களை நோக்கி ஓடிவந்துவிடும். நீங்கள் விரும்பியதை அடைந்துவிடலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Enga sir.. evening aana deiva magal serial nu podran... ore kolai kollai , Kumdumbathai kedupathu nu .. per matum Deivegama vechukuranuga.. atha veetla irukaravanga pathe theeruvenu adam pudikaranga.. meeri paka kudathunu sonna, sandai than... ena pana..
Post a Comment