வணக்கம்!
பணக்காரர்களின் அளவுக்கோல் எது என்பதைபற்றி இந்த பதிவில் என்னுடைய மற்றும் எனது நண்பர்களின் கருத்துக்களை வைத்து சொல்லுகிறேன். இதனை தவறாக நினைக்கவேண்டாம் உங்களை மாற்றிக்கொள்ள இந்த கருத்து உதவும்.
நம்ம ஆளங்க வாழும் வாழ்க்கை எல்லாமே ஒரு பற்றாக்குறை வாழ்க்கையாக தான் வாழ்க்கின்றனர். பெரிய அளவில் வாழ்க்கின்றேன் என்று சொல்லுபவர்கள் கூட ஒரு சாதாரணமான வாழ்க்கையை தான் வாழ்க்கின்றனர். எல்லாவித்திலும் பற்றாக்குறை நமது மக்களிடம் இருக்கின்றது என்பது தான் உண்மை.
நமது இரத்தத்தில் கூட பணக்காரர்களின் இரத்தம் ஒடவில்லை என்பது தான் உண்மையாக இருக்கின்றது. அதாவது மித மிஞ்சிய பணக்காரர்களின் வாழ்க்கை இரத்தம் என்பது ஓடவில்லை. ஒரு சாதாரணமான மனிதனின் இரத்தம் இருக்கின்றது.
என்னை சந்திப்பவர்களிடம் நான் கேட்கும் வார்த்தை நீங்கள் எப்படி வாழவேண்டும் என்று நினைக்கின்றீர்கள் என்று கேட்பேன். அவர்களின் ஆசையை பார்த்தால் அது பணக்காரர்களின் வாழ்க்கை என்பது துளியும் கிடையாது. ஒரு வீடு ஒரு கார் இது போதும் என்பார்கள். இது தான் பணக்காரா வாழ்க்கையா என்று நான் கேட்பது உண்டு.
ஒரு சிலர் என்னிடம் போனில் பேசும்பொழுது பணம் என்பது எனக்கு கஷ்டம் இல்லை சார். நான் பிறந்ததில் இருந்து பணக்காரகுடும்பம் என்று சொல்லுவார்கள். உங்களின் பூஜைக்கு பணம் அனுப்புகிறேன் என்று சொல்லி ஐம்பது ரூபாய் அல்லது நூறு ரூபாய் அனுப்பி வைப்பார்கள்.
இன்னமும் மேலே சொல்லவேண்டும் என்றால் ஒருவர் என்னிடம் சொன்னது நம்ம ஆளுங்க பங்காள மாதிரி வீடு கட்டுவேன் என்பார்கள். நம்ம ஆளுங்க சொல்லுவதில் கூட மாதிரி தான் கட்டுவேன். பங்காள கட்டுவேன் என்று சொல்லமாட்டார்கள். நம்ம ஆளுங்க இப்படி தான் சார் இருப்பார்கள் என்று சொல்லுவார்.
இன்னமும் மேலே சொல்ல வேண்டும் என்றால் நம்ம ஆளுங்க லட்சக்கணக்கில் பணம் போட்டு காரை வாங்கி அதில் முன்னாடி உட்கார்ந்துகொண்டு தான் செல்வார்கள். ஒரு முதலாளி முன்னாடி உட்காரவே கூடாது என்பது தான் விதி. நம்ம ஆளுங்க பாருங்க இப்படி தான் செல்வார்கள்.
கனவு காணுவதில் என்ன சின்னது பெரியது. உலக கோடிஸ்வரர்கள் யார் அவர்கள் எப்படி வாழ்க்கின்றனர் அவர்களின் பழக்க வழக்கம் எப்படி இருக்கும் என்பதை கொஞ்சம் தெரிந்துக்கொண்டு அதற்கு கனவு காணுங்கள்.
மேலே சொன்னது அனைத்தும் உங்களை மேம்படுத்த மட்டுமே சொல்லுகிறேன். மற்றபடி எந்தவித நோக்கமும் இல்லை நண்பர்களே. இனி மேலாவது உங்களின் கனவு பெரியதாக இருக்கவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Well Said Sir..
Post a Comment