வணக்கம்!
வரும் பெளர்ணமி அன்று உங்களின் குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதல் செய்யுங்கள். பச்சைப்பரப்புதலைப்பற்றி நான் அடிக்கடி சொன்னாலும் மேலும் சொல்லுவது பல பேர்கள் செய்யாமல் இருப்பதால் இதனை சொல்லுகிறேன்.
ஆடிமாதம் எல்லா வீட்டிலும் விஷேசமாக பூஜைகளை செய்து வருவீர்கள். அதோடு பச்சைப்பரப்புதலையும் செய்தால் உங்களுக்கு நிறைய நல்லது நடக்க உங்களின் குலதெய்வம் உதவி புரியும். குலதெய்வத்தின் அருளை பெறுவதற்க்கும் இது வழி செய்யும்.
குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதலை செய்தாலே போதும் உங்களின் வீட்டில் தனியாக லட்சுமி பூஜை என்று செய்யவேண்டியதில்லை. குலதெய்வமே அதனை கொடுக்கும் என்பது நமது அனுபவம் மற்றும் நமது நண்பர்கள் இத்தனை நாள்கள் செய்ததால் வந்த அனுபவம்.
ஆன்மீகம் என்று வந்தாலே நிறைய பூஜைகளை சொல்லுவார்கள். அத்தனை பூஜைகளையும் ஒருவர் செய்யவேண்டும் என்றால் அது அவர் இதனை மட்டுமே செய்யமுடியும் வேறு வேலையை செய்ய முடியாது. பூஜைகளை மட்டுமே செய்யமுடியும் வேறு வேலையை செய்ய அவரால் முடியாது.
எல்லாவற்றிக்கும் சேர்த்து ஒரு பூஜை செய்தால் அது அனைத்தையும் கொடுக்கும் அது தான் பச்சைப்பரப்புதல் என்ற உங்களின் குலதெய்வத்திற்க்கு செய்யும் பூஜை. இதனை மட்டும் செய்து அனைத்து பூஜைகளின் பயனையும் பெற்றுவிடலாம். இதுவரை செய்யாதவர்கள் உங்களின் குலதெய்வத்திற்க்கு வருகின்ற பெளர்ணமி அன்று இதனை செய்யுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Very Useful Information sir. Thanks a lot
Post a Comment