வணக்கம்!
பல வருடங்களாக நான் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று இருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவண்ணாமலை கிரிவலம் செல்லவில்லை. நமது ஊரில் இருந்து வந்தால் அங்கு தங்கிவிட்டு தான் கிரிவலம் செல்லமுடியும் நமது ஊருக்கும் திருவண்ணாமலைக்கும் தூரம் அதிகம் என்பதால் தங்கிவிட்டு தான் கிரிவலம் செல்லமுடியும்.
கிரிவலத்தில் நல்ல நன்மை கிடைக்கும் என்பது என்னுடைய சொந்த அனுபவத்திலும் எனது நண்பர்களின் வட்டாரத்திலும் நல்ல அனுபவத்தை தந்திருக்கிறது என்று சொல்லலாம். அவர் அவர்களின் கர்மா வினைப்படி அவர்களுக்கு பலனை கொடுத்து இருக்கின்றது.
ஒரு சிலருக்கு ஒரு முறையில் நல்லது நடந்துவிடும். ஒரு சிலருக்கு பலமுறை சென்றால் தான் அவர்கள் விரும்பியது கிடைக்கும். பிரச்சினையோடு வருபவர்களுக்கு நிறைய தடவை சென்றால் பலன் கிடைக்கும். பலன் கிடைக்காமல் சென்றவர்கள் இருக்கமாட்டார்கள். அனைத்தும் அண்ணாமலையாரின் அருள் இன்றி வேறு எதுவும் இருக்க முடியாது.
கிரிவலம் செல்லும்பொழுது என்னோடு நிறைய நண்பர்கள் எல்லாம் வந்திருக்கின்றனர். தனியாகவும் கிரிவலம் சென்று இருக்கிறேன். கிரிவலம் செல்லும்பொழுது என்னோடு வரும் நண்பர்கள் நிறைய கேள்விகளை கேட்பார்கள் அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு நடந்து இருக்கிறேன்.
நான் அடுத்தவர்களுக்கு பதில் சொன்னாலும் அண்ணாமலையார் எனக்கும் அருளை கொடுத்து இருக்கிறார். ஏன் என்றால் கிரிவலம் செல்லும்பொழுது பேசாமல் செல்லவேண்டும் என்பார்கள். நான் பேசிக்கொண்டு செல்லும்பொழுதும் எனக்கு அருளை தந்திருக்கிறார்.
வரும் நாளில் திருவண்ணாமலை கிரிவலம் செல்லவேண்டும் என்ற ஒரு விருப்பம் இருக்கின்றது. அது ஒரு சாதாரணமான நாளாக பார்த்து செல்லவேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். உங்களுக்கு எப்பொழுது எல்லாம் நேரம் கிடைக்கிறதாே கிரிவலம் சென்று வாருங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
அய்யா
எல்லா நாட்களிலும் கிரிவலம் செல்லலாமா?
Post a Comment