Followers

Sunday, September 1, 2013

ஆன்மீக அனுபவங்கள் 110


வணக்கம் நண்பர்களே!
                     நான் பல ஆலயங்களுக்கு செல்லும்பொழுது அங்கு பூஜை செய்யும் குருக்களை நன்றாக கவனித்து பார்த்தலில் ஒரு ஒற்றுமையான ஒரு விசயம் தெரிந்ததை கண்டுபிடித்தேன். அதனைப்பற்றி எனது குருநாதரிடம் விசாரிக்கும்பொழுது ஒரு உண்மையை சொன்னார் அதனை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

நான் ஆலயங்களில் பூஜை செய்பவர்களை பார்த்தலில் என்ன ஒற்றுமை என்றால் அனைவரின் கால்களும் ஏதாவது ஒருவிதத்தில் ஊனமாக இருக்கின்றது. ஊனம் இல்லை என்றால் கால் நடப்பது கூட தாங்கி நடப்பார்கள். நொண்டிகால் போல் நடப்பார்கள். இதனை குருநாதரிடம் கேட்டவுடன் சொன்னார். ஒரு மனிதன் அவனின் கால்களில் தான் நிற்கிறான். அவனின் பாதம் தான் மிகமுக்கியமான ஒன்று. நாம் சாமி கும்பிடபோனாலும் திருவடியை தான் கும்பிடுவோம். அப்படி ஒரு சக்தி திருவடிக்கு உண்டு.

பொதுவாக ஐயர்கள் அபிஷேகம் செய்யும்பொழுது தற்பொழுது உள்ள கோவில்களில் சிலைக்கு அருகிலேயே நின்று அபிஷேகம் செய்வார்கள். அந்த நீர் இவர்களின் கால்களிலும் படும். இதனை எடுத்து வரும் பக்தர்களுக்கு தீர்த்தமாக கொடுக்கிறார்கள். 

சாமிக்கு அபிஷேகம் செய்வது போல் இவர்களுக்கே அபிஷேகம் செய்கின்றார்கள். அது மிகப்பெரிய பாவம். அங்கு இருக்கும் சிலைகளை இவர்கள் கற்சிலை என்று நினைக்கிறார்கள் அது ஒரு ஐதீகம் என்று நினைப்பதில்லை. அதனால் தான் பல பேர்களுக்கு பூஜைசெய்பவர்களின் கால்கள் பிரச்சினையாக இருக்கும் அல்லது அவர்களின் வீடுகளில் பிரச்சினையாக இருக்கும் என்றார்.

பழம்கால கோவில்களை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சிலைக்கு அருகிலேயே ஒரு மேடைபோல் இருக்கும் அதன் மீது ஏறி நின்று குருக்கள் அபிஷேகம் செய்வார்கள். இன்றைய காலகோவில்களில் அப்படி அமைப்பதில்லை. 

இந்த பதிவுக்கு வரும் பூஜை செய்பவர்கள் இதனை கவனத்தில் கொண்டு அபிஷேகம் செய்யுங்கள். ஒரு சொட்டு நீர் கூட உங்களின் மேல் படக்கூடாது. 



இந்த காலத்தில் கோவில் கட்டினாலும் பழங்காலத்தில் எப்படி முறையை கையாண்டார்கள் என்பதை கவனத்தில் கொண்டு கோவிலை கட்டுங்கள். இப்பொழுது பல கோவில்கள் கட்டுகிறார்கள் அதில் ராஜகோபுரம் ஒன்று இன்று பகட்டுக்காக கட்டப்படுகிறது. அருகில் போனாலே பயமாக இருக்கின்றது கீழே விழுந்துவிடுமோ என்று எண்ண தோன்றுகிறது. சின்ன கோவிலாக கட்டினாலும் சரியான முறையில் கட்டப்படுகிறதா என்று தான் கவனிக்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: