வணக்கம் நண்பர்களே!
ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். இந்த பதிவில் ராகு தசா நடைபெறும்பொழுது அனைவருக்கும் நடைபெறுகின்ற ஒரு முக்கியமான ஒரு செய்தியைப்பற்றி பார்க்கலாம்.
ராகு என்பது பாம்பு. இது விஷத்தை நமது உடலில் மறைமுகமாக செலுத்துக்கிறது. எப்படி என்றால் ஒருவர் ஒரு ஊரில் பிறக்கிறார் என்றால் அந்த ஊருக்கும் அவருக்கும் ஏதோ ஒன்று மறைமுகமான சம்பந்தம் இருக்கும். அவரின் ஊரில் உள்ள உணவு பழக்கபழக்கத்திற்க்கும் அவருக்கும் மறைமுகமான சம்பந்தம் இருக்கும். அவரின் ஊரில் உள்ள உணவு அவரின் உடலுக்கு ஏற்றது போல் இருக்கும்.
அவர் சாப்பிடுகின்ற உணவு அவரின் உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் அவருக்கு நல்ல ஆரோக்கியமான நிலையை ஏற்படுத்திக்கொடுக்கும்.ஒருவருக்கு ராகு தசா நடைபெறும்பொழுது அதிகபட்சமாக அவரை அந்த ஊரில் இருந்து பிரித்துவிடும். அவர் வெளியூரில் வாழ்வது போல் ஏற்படுத்திக்கொடுத்துவிடும். வெளிநாட்டில் கூட வாழவைக்கும்.
அவர் வெளிநாட்டில் வாழ்க்கின்ற பொழுது அவர் அந்த ஊரின் உணவை சாப்பிடுவதால் அவரின் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகும். ராகு அவரின் உடல்நிலையை கெடுத்துவிடும். அதிகபட்சமாக இவ்வாறு பல பேர் பாதிப்புகுள்ளாகிறார்கள். ராகு தசா நடைபெறும் காலத்தில் இது ஏற்படும். ராகுவின் நட்சத்திரத்தை உடையவர்களும் இந்த பாதிப்பில் மாட்டிக்கொள்வார்கள்.
இப்பொழுது அனைத்த நாட்டு உணவுகளும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. நீங்கள் என்ன தான் அதனை விரும்பி சாப்பிட்டாலும் ஒரு காலத்திற்க்கு பிறகு அந்த உணவு உங்களின் உடல் ஏற்றுக்கொள்ளாது. பிரச்சினை தான் வரும்.
வெளிநாட்டு உணவுகளை விரும்பி உண்ணவைப்பது ராகுவின் வேலை தான். உங்களுக்கு வெளிநாட்டு உணவுகள் மீது விருப்பம் ஏற்பட்டால் அது ராகு உங்களை அதிகமாக ஆட்க்கொள்கிறார் என்று அர்த்தம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment