Followers

Thursday, September 19, 2013

ஆன்மீக அனுபவங்கள் 113


வணக்கம் நண்பர்களே !
                    நாம் கோவிலுக்கு சென்றால் அது எந்த கோவிலாக இருந்தாலும் அந்த கோவிலில் உள்ள சந்நிதியை பார்த்தால் அதில் மூலவர் ஒருவராக இருந்தாலும் அவரை சுற்றி பல தெய்வங்கள் இருக்கும். அதனைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

நாங்கள் ஒரு வேலைக்கு அம்மனை அனுப்புவதாக இருந்தாலும் இப்படி தான் அம்மனை மட்டும் தனியாக அனுப்பமாட்டோம். அம்மனை சுற்றி பல தெய்வங்கள் இருக்கும் அவர்களையும் சேர்த்து தான் அனுப்புவோம். ஏன் என்றால் அம்மனின் பாதுகாப்புக்கு என்று இப்படி அனுப்புவது வழக்கம்.

ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு அனுப்பும்பொழுது இப்படி அனுப்புவது வழக்கம். இதுபோல் நீங்களும் ஒரு அம்மனை வணங்கும்பொழுது அல்லது எந்த தெய்வத்தையும் வணங்கும்பொழுது அவர்களை சுற்றி இருக்கும் தெய்வத்தையும் வணங்குவது நல்லது. அப்படி வணங்கும்பொழுது அவர்களின் உதவியும் உங்களுக்கு கிடைக்கும். 

அந்த கோவிலில் தலைமை அம்மனாக இருந்தாலும் தலைமையை மட்டும் வணங்கினால் போதும் என்ற மனநிலை இருக்ககூடாது. சுற்றி இருப்பவர்களின் மனதிலும் நீங்கள் இடம் பிடிக்கும்பொழுது விரைவில் உங்களின் வேலை முடியும்.

நீங்கள் ஒரு கோவிலுக்குள் சென்றால் அந்த கோவிலில் எப்படி சந்நிதிகள் அமைத்துள்ளார்கள். பரிவாரதெய்வங்கள் என்ன என்ன இருக்கின்றது என்பதை பற்றி நன்றாக தெரிந்துக்கொள்ளவேண்டும். அதே நேரத்தில் கோவிலின் தலவரலாறும் தெரிந்திருக்கவேண்டும்.

இது அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொண்டு தான் அந்த சக்தியின் உண்மையான சொரூபம் நமக்கு தெரியும். அதே நேரத்தில் அந்த ஊரைப்பற்றியும் நன்றாக தெரிந்து இருக்கவேண்டும்.

என்னடா ஊரைப்பற்றி எல்லாம் தெரிந்துஇருக்க வேண்டும் என்று சொல்லுகிறாரே என்று கேட்க தோன்றும். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மாதிரியான சக்தி இருக்கும். அதனால் சொன்னேன்.

ஊரைப்பற்றியும் தெரிந்தால் மட்டுமே அந்த ஊரில் உள்ள நபர்களுக்கு நம்மால் ஆன்மீகவழியில் நன்மை செய்ய முடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

antonyarun said...


Dear sir,

Thanks for your article

What is the difference of Amman and
Isaki Amman.
Thanks

Antony

rajeshsubbu said...

வணக்கம் ஒவ்வொரு அம்மனுக்கும் ஒவ்வொரு விதமான செயல்கள் இருக்கும் உங்களின் ஊரில் இருக்கும் அம்மனின் வரலாற்றை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.