வணக்கம் நண்பர்களே!
ராகு தசாவில் குருபுத்தியில் ஒரு முக்கியமான ஒரு கருத்தை பார்க்கலாம். இன்றைக்கு பார்த்தால் புற்றுநோய் என்பது மிக கொடுமையான ஆட்கொல்லி நோயாக இருக்கின்றது. எந்த ஊரில் இறப்பு நடந்தாலும் அதிகபட்சமாக புற்றுநோயால் இறந்தார் என்று கேள்விபடுகிறோம். இதற்கு சோதிட ரீதியாக காரணம் என்ன என்று பார்க்கலாம்.
புற்றுநோய் என்பது தேவையற்ற சதை வளர்ச்சி என்று சொல்லுகிறார்கள். பல காரணங்கள் சொன்னாலும் குரு கிரகம் பாதிப்படைவதால் மட்டுமே இந்த நோய் வருவதற்க்கான காரணங்களாக இருக்கின்றது. குரு கிரகம் ராகுவோடு அல்லது பாபகிரகங்ளோடு இணையும்பொழுது புற்றுநோய் ஏற்படுகின்றது. குரு கிரகம் நன்றாக இருந்தால் புற்றுநோய் ஏற்படாது. ராகுவை முக்கியமாக சோதிடர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ராகுக்கும் குருவுக்கும் ஒற்றுவராது. ராகுவின் தசாவில் குருவின் புத்தியில் அதிகமான நபர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவது அதிகமான நபர்களுக்கு நடந்துள்ளது. கடந்த வாரம் என்று நினைக்கிறேன். செய்திதாள்களில் ஒரு செய்தியை படித்தேன். வடமாநில நபர்களால் தான் தமிழ்நாட்டில் அதிகமாக புற்றுநோய் ஏற்படுகிறது என்று படித்தேன். அவர்கள் குட்கா மற்றும் புற்றுநோயை வரவழைக்கும் விசயங்களில் அதிகமாக கவனம் செலுத்துவதால் அதனை பார்த்து நம்ம ஆட்களும் பழக்கிக்கொள்கிறார்கள் விளைவு புற்றுநோய்க்கு பலியாகுகிறார்கள்.
ராகு என்பது பிறமாநிலத்தவரை குறிக்கும் ஒரு கிரகம் அந்த கிரகத்தால் தான் அதிகமாக புற்றுநோய் ஏற்படுகிறது. பாருங்கள் சோதிடத்திற்க்கும் நடக்கும் நிகழ்வுக்கும் பொருத்தமாக இருக்கின்றது.
நமது உணவில் மாற்றம் ஏற்பட்டாலும் இது போன்ற நோய்கள் வரக்கூடும். ஏன் என்றால் உங்களுக்கு வெளியிடங்களில் ஏதோ ஒரு உணவு மட்டும் தான் கிடைக்கும் அதனை நீங்கள் சாப்பிடவேண்டும் எனும்பொழுது அந்த உணவே உங்களின் உடலில் விஷமாக மாறுவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது. வெளியிடங்களுக்கு செல்ல வைப்பதே ராகு தானே அதனால் இந்த கருத்தை சொன்னேன்.
நமது உணவில் மாற்றம் ஏற்பட்டாலும் இது போன்ற நோய்கள் வரக்கூடும். ஏன் என்றால் உங்களுக்கு வெளியிடங்களில் ஏதோ ஒரு உணவு மட்டும் தான் கிடைக்கும் அதனை நீங்கள் சாப்பிடவேண்டும் எனும்பொழுது அந்த உணவே உங்களின் உடலில் விஷமாக மாறுவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது. வெளியிடங்களுக்கு செல்ல வைப்பதே ராகு தானே அதனால் இந்த கருத்தை சொன்னேன்.
ராகுவின் தசாவில் குருவின் புத்தி உங்களுக்கு நடக்கிறது என்றால் உங்களின் உடல்நிலையை நன்றாக பரிசோதனை செய்துக்கொள்வது நலம். ஆரம்ப நாட்களில் புற்றுநோயை முற்றிலுமாக குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment