வணக்கம் நண்பர்களே!
இன்றைய தேதியில் குரு கிடைக்க பல பேர் பல ஐடியாக்களை அவிழ்துவிடுகிறார்கள். உண்மையான ஒரு குரு ஒருவர் கிடைக்க மாட்டார்களா என்று அவன் அவன் ஏங்கிக்கொண்டிருக்கிறான். ஒவ்வொருவரும் குரு வருகிறார் என்று விளம்பரம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். வாங்க எங்க குரு இருக்கிறார் அவர் உங்களுக்கு எல்லாத்தையும் தருவார் என்று சொல்லுகிறார்கள்.
ஒருவருக்கு ஒருவர் குருவாக வருகிறார் என்றால் அந்த குரு வெளியில் வரமாட்டார். அவரை பார்க்கவே முடியதா நிலையில் இருப்பார். தன்னை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். வீண் பகட்டு செய்யமாட்டார். அதே நேரத்தில் அவரின் உடமை பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம். மெல்லிய உடம்பாக இருக்கும். அதிக தவத்தின் காரணமாக உடல் மெலிந்து இருக்கும்.
அவரின் அருகில் நீங்கள் சென்றாலே ஏகாந்தத்தில் இருந்தது போல் தான் நீங்கள் இருப்பீர்கள். அவரை பார்த்தாலே அவருடன் சென்றுவிடலாமே என்று எண்ணம் தோன்றும். அப்படிபட்டவன் தான் குரு.அப்படிப்பட்டவர் தான் குரு. என்னிடம் வாருங்கள் உங்களுக்கு மந்திரம் கற்றுதருகிறேன். ஆசி வழங்கிறேன் என்று நோட்டீஸ் விடமாட்டார்கள்.
ஒரு குரு அதிகபட்சமாக பதினெட்டு பேர்க்கு குருவாக அமையமுடியும் அதற்கு மேல் அவரால் முடியாத காரியம். பதினெட்டு சிஷ்யர்கள் அவருக்கு சீடர்களாக அமையமுடியும். அதற்குமேல் அவர் கொடுத்தால் அது ஆட்டு மந்தை அங்கு ஒன்றும் இல்லை என்று அர்த்தம். நீங்கள் பல மகான்களின் வாழ்க்கையை உற்று நோக்கினால் ஒருவன் தான் சிஷ்யனாக இருப்பான். அதிகபட்சமாக பதினெட்டை தாண்டாது. அவர்களிடம் இல்லாத சக்தியா இன்றைய காலகட்டத்தில் இருக்கும் குருவிற்க்கு இருக்கிறது.
பல பேர் என்னிடம் சார் உங்களை குருவாக ஏற்றுக்கொள்கிறேன் என்பார்கள் எனக்கு மனதிற்க்குள் சிரிப்பு தான் வரும். இவர்கள் என்னடா இப்படி விசயம் தெரியாமல் இருக்கிறார்களே என்று தோன்றும். எனக்கு அந்தமாதிரி தகுதி எல்லாம் கிடையாது. உங்களை முட்டாளாக்க நான் விரும்பவில்லை என்று தான் சொல்லுவேன்.
உங்களின் ஆன்மாவும் உங்கள் குருவின் ஆன்மாவும் ஒரே விகிதத்தில் இணையும்பொழுது மட்டுமே அதாவது இவன் தான் நமக்கு குரு என்று உங்களுக்கு தோன்றும். அதே நேரத்தில் அவர்க்கு இவன் தான் நமது சீடன் என்று தோன்றும். அந்த மாதிரி எங்கையாவது உங்களின் வாழ்க்கையில் நடந்தால் அவர் தான் உங்களின் குரு.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
3 comments:
இன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் உங்களுக்குக்
கிடைத்திருப்பது போல் ஒரு நல்ல குரு
கிடைப்பது கடினமே .
ஜாதகத்தில் குரு நல்ல நிலைமையில் இருந்தாலும்
அவருக்கும் ஓர் சற்குரு தேவைப்படுமா ?
அவர் நவக்ரஹ குருவை அல்லது தட்சிணாமூர்த்தியை அல்லது
பிரம்மாவை வழிப்பட்டு தான் விரும்புவதை சுயமாக
கற்றுக்கொள்ள முடியாதா ?
Dear,
Thanks for this article about Guru
Antony
தங்களின் வருகைக்கு நன்றி Antony
Post a Comment