Followers

Wednesday, September 18, 2013

நம்பினால் நம்புங்கள்

 
வணக்கம் நண்பர்களே!
                    நான் தொழிலில் ஆன்மீகவழியில் எப்படி உதவிச்செய்கிறேன் என்பதைப்பற்றி சொல்லுகிறேன்.

இருவர் சந்தித்து பேசிகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த இரண்டு பேரையும் இணைத்தால் மட்டும் தான் அவர்கள் வியாபாரம் செய்யமுடியும். இருவரும் பேசும்பொழுது துர்சக்திகளின் ஆதிக்கம் ஒருவருக்கு இருந்தாலும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிடும். வியாபாரம் நடைபெறாது.

இருவரும் பேசும்பொழுது அந்த இடத்தில் நாங்கள் நல்லசக்தியின் ஆதிக்கம் இருப்பது போல் செய்துவிடுவோம். துர்சக்திகளை வெளியில் எடுத்துவிடுவோம். இருவருக்கும் நல்ல உறவை நல்ல சக்திகள் ஏற்படுத்திவிடும். இது அனைத்து இடத்திலும் இப்படி தான் நடைபெறும். இதனை ஆன்மீகத்தில் இருப்பவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்.

ஒரு வீட்டிற்க்குள்ளும் நல்ல சக்தி மற்றும் தீயசக்தி இருக்கும். இதில் எந்த சக்தி ஆதிக்கம் இருக்கின்றதோ அதனை பொருத்து அந்த வீட்டில் உள்ளவர்களின் செயல்பாடு இருக்கும். உங்களுக்கு கெடுதல் தரும் கிரங்களின் தசா மற்றும் கோச்சார காலங்களில் தீயசக்தியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அப்பொழுது மனிதன் சோர்ந்துவிடுவான். 
 
ஒரு இடத்தில் நல்ல சக்தியும் இருக்கும் அதே நேரத்தில் தீயசக்தியும் இருக்கும். இருவரின் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அதனை பொறுத்து நல்லது தீயது நடக்கும். எதுவும் நம் கையில் இல்லை அனைத்தும் ஆட்டிவைப்பனின் செயலுக்கு தகுந்தவாறு நாம் ஆடிக்கொண்டு இருப்போம்.

தீயசக்திகளை குறைப்பதற்க்கு என்ன வழியே அதனை செய்வது தான் எங்களின் வேலை. தீயசக்திகளை குறைப்பதற்க்கு ஒரு வழி அதனை அழிப்பது அதாவது நாசம் செய்வது. மற்றொன்று அந்த இடத்தில் இருந்து வெளியில் போகவைப்பது. இதனை செய்து தான் நாங்கள் அனைவருக்கும் செய்கின்ற காரியங்களில் வெற்றியை பெற்று தருகிறோம்.

முதலில் இப்படிபட்ட ஒன்று இருக்கின்றது என்பதை பார்ப்பதற்க்கு நீங்கள் ஆன்மீகத்தில் குறைந்தது நான்கு வருட காலங்கள் பயிற்சி செய்யவேண்டும். அப்பொழுது மட்டும் உங்களின் கண்களுக்கு இது தெரியவரும். இந்த வேலையை மட்டும் ஒரு குரு அவ்வளவு எளிதில் கற்று தரமாட்டார்கள். நான் போராடி கற்றேன். இதனை மட்டும் ஒருவன் கற்றுவிட்டால் அவனால் எதனையும் செய்யமுடியும்.

அடையார் அலுவலகத்தில் நெட் வேலை செய்யவில்லை. சரி செய்தவுடன் தொடர்ந்த நிறைய பதிவுகளை பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
 
 

No comments: