வணக்கம் நண்பர்களே!
ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். இப்பதிவிலும் தொடர்ச்சியாக பார்க்கலாம்.
ராகு தசா ஒரு சிலருக்கு திருட்டு புத்தியையும் ஏற்படுத்திவிடும். ஏன் என்றால் திருட தூண்டுவது ராகுவின் வேலை அதே நேரத்தில் அந்த திருட்டை கண்டுபிடிக்க உதவுவதும் ராகுவின் வேலையாக தான் இருக்கும். அதனால் ஒருவருக்கு ராகு தசா நடைபெறுமபொழுது அமையும் வீட்டை பொருத்து மற்றும் மற்றைய கிரகநிலைகளை வைத்து பலனை சொல்லவேண்டும்.
ஒருவருக்கு ராகு தசா நடைபெறும்பொழுது அவர்களிடம் இருந்து பொருட்கள் திருடும் போகும். ஒரு சிலருக்கு ராகு செவ்வாயோடு சேர்ந்து ராகு தசா நடந்தால் அந்த நபருக்கு திருடர்களால் ஆபத்து வரகூடும். இரத்த காயங்களை உருவாக்கிவிட்டு செல்வார்கள். நாம் செய்திதாள்களில் படிக்கிறோம் அல்லவா. கொலை செய்து விட்டு திருடி சென்றார்கள் என்று வரும் இது எல்லாம் இப்படிபட்ட கிரக நிலைகளில் ஏற்படவாய்ப்பு உண்டு.
ராகு சுக்கிரன் சேர்ந்து தசா நடைபெறும்பொழுது திருடர்களால கற்பு போகும் நிலை கூட ஏற்படலாம். ராகுவும் புதனும் சேர்ந்து ராகு தசா நடைபெறும்பொழுது எழுதி வைத்த பேப்பர் திருடுபோய்விடும். பேப்பர் என்றால் பத்திரம் இந்த மாதிரியான விசயத்தில் நடைபெறும்.
ராகுவோடு சேரும் கிரகங்களின் குணநலத்தை வைத்து எப்படி திருட்டு போகும் என்பதை சொல்லுங்கள். அதே நேரத்தில் இந்த திருட்டை கண்டுபிடிக்க உதவுவதும் ராகு தான்.எல்லாம் ராகுவின் விளையாட்டு தான்.
ராகு லக்கினத்தோடு சம்பந்தம்படும்பொழுது அவருக்கு திருட்டு புத்தி வருகின்றது. அது லக்கினத்தை பொருத்து அமையும். இதனை வெளியில் நாம் சொல்லமுடியாது. உங்களுக்குள் கணித்துக்கொள்ளலாம். நீ திருடன் என்று சொன்னால் வந்த நபர் நம்மை தாக்ககூடும் அதனால் தவிர்ப்பது நலம்
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment