வணக்கம் நண்பர்களே!
ராகு தசாவைப்பற்றி பார்த்துவருகிறோம். ராகு தசாவில் ஒருவருக்கு காமம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்பதைப்பற்றி ஏற்கனவே சொல்லிருந்தேன். ராகு தசா தருவது எல்லாம் பார்த்தால் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையதாக இருக்கும்.
ராகு தசாவில் வெளி உணவுகளை விரும்பி உண்ண வைப்பார். இப்பொழுது இருக்கும் உணவுகள் எல்லாம் காமத்தை தூண்டுவதாக தான் இருக்கின்றது. நாம் பிறந்த இடத்தில் உள்ள உணவாக இருந்தால் அது அதிகமான காமத்தை தூண்டவாய்பில்லாமல் இருக்கும். ராகு தசாவில் நாம் பிறந்த இடத்தில் அதிகபட்டசமாக இருப்பதற்க்கு வாய்ப்பில்லை. ஏதோ ஒரு காரணத்திற்க்கு வெளியில் செல்ல தான் வேண்டும்.
வெளியிடங்களுக்கு வெளியில் செல்லும்பொழுது நாம் அந்த உணவுகளை சாப்பிடும்பொழுது நமக்கு காமஉணர்ச்சி ஏற்படுகிறது. விளைவு நாம் திசை மாறுகிறோம். அந்த திசை மாறுவதால் நல்லதும் நடக்கலாம் அல்லது தீயதும் நடக்கலாம்.
நாம் ஒரு கலாசாரத்தில் வாழ்ந்துக்கொண்டு இருப்போம். புதியதாக ஒரு கலாசாரத்தை நாம் பார்க்கும்பொழுது அந்த கலாசாரத்தின் மீது ஒரு ஈடுபாடு வருவது இயற்கை. பார்த்து பார்த்து பழகி போன நமது மனதிற்க்கு புதியதாக பார்க்கும்பொழுது ஒரு ஈர்ப்பு வரும். அந்த கலாச்சாரப்படி நாம் வாழ்ந்து பார்க்கலாம் என்று தோன்றும் பொழுது உங்களின் நிலை மாறுபடுகிறது.
நமது சுயத்தை நாம் மறக்காமல் இருந்தால் அதே நேரத்தில் நாம் என்ன தான் உலகம் முழுவதும் சுற்றினாலும் நமது ஊருக்கு தான் வரவேண்டும்.வாழவேண்டும் என்ற நிலை ஏற்படலாம். அதனால் நமது ஊரின் கலாசாரம் மற்றும் நமது உணவு தான் நமக்கு முக்கியம் என்று மனதில் நினைத்தால் காமத்தை தரும் ராகுவின் தசாவில் இருந்து தப்பித்துவிடலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment