Followers

Tuesday, December 2, 2014

உங்களின் வீடு பகுதி 6


வணக்கம் நண்பர்களே!
                      உங்களின் வீட்டை உங்களின் ஜாதகத்தை வைத்து பார்த்து வருகிறோம். பல நண்பர்களிடமும் இருந்து நல்ல வரவேற்ப்பை இந்த தொடர் பெற்று இருக்கிறது. உங்களின் வீட்டை நல்ல முறையில் அமைத்துக்கொள்ளவும் நிறைய செய்திகளை அவ்வப்பொழுது தருகிறேன்.

கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் ஒரு சொந்த வீடு அமையவேண்டும் என்ற ஒரு வேண்டுதலையும் வரும் அம்மன் பூஜையில் அம்மனிடம் வைக்கிறேன்.உங்களுக்கு அம்மன் அந்த பாக்கியத்தை அருளும்.

உங்களின் ஜாதகத்தில் புதன் கிரகம் நான்காவது வீட்டில் நல்ல முறையில் அமைந்தால் உங்களின் வீட்டில் நல்ல சக்தி குடிக்கொண்டிருக்கும். விஷ்ணுவின் அடியவர்கள் அதிக வாசம் புரியும் வீடாக உங்களின் வீடு இருக்கும்.

ஜாதகத்தில் நான்காவது வீட்டில் புதன் சம்பந்தப்பட்டால் உங்களுக்கு இரண்டு வீடு அமைவதற்க்கு வாய்ப்பு அதிகம் இருக்கும்.பெரும்பாலும் வீடு அமைவது நகரத்தில் இருக்கும். வணிக வளாகம் இருக்கும் இடத்தில் அமைவதற்க்கு வாய்ப்பு அதிகம் இருக்கும்.

புதன் கெட்டுருந்தால் உங்களுக்கு வீடு அமைவது கடினமாக இருக்கும். தற்பொழுது தங்கியுள்ள வீடு சுபிட்ஷம் இல்லாத வீடாக இருக்கும். குலமும் தழைக்காது.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

No comments: