Followers

Sunday, December 14, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
பெருமதிப்புக்குரிய ஐயா, 
எனது நீண்ட நாள் சந்தேகம் இது, 12 இல் கேது இருந்தால் அது  மோட்சத்துக்கு  இட்டு செல்லும் என்பது பொதுவான கருத்தாகவிருகிறது. மோட்சம் என்பது பாவம் , புண்ணியம் இரண்டும் இல்லாத நிலையில் தானே சித்திக்கும். அதாவது இப்பிறவியிலேயே ஒருவர் தன்னுடைய பூர்வ ஜென்ம பாவங்களை முழுமையாக அனுபவித்து முடித்திருப்பதும், அடுத்த பிறவிக்கு இப்பிறவி புண்ணியம் பங்களிக்காத நிலையில்  மோட்சம் கிடைப்பது சாத்தியமான ஒன்றாகும். இது எளிதில்  புரிந்து  கொள்ள கூடியதாயும் இருக்கிறது. ஆக பாக்கிய ஸ்தானம், புண்ணிய ஸ்தானம்  இவையோடு தொடர்புபட்டே   மோட்சம் அமையுமா? (கேது 12இல் அமைந்தால் மோட்சம் என்பதன் உண்மையான விளக்கம் என்ன? )

கேள்வி கேட்தற்க்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் முதல் கேள்வி இது. பொதுவாக நான் சோதிடத்தை புத்தகத்தில் போட்டுள்ளது போல் படித்து ஒப்பித்து சொல்பவன் கிடையாது. சோதிட புத்தகத்தில் படித்ததை ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்தில் அப்படி நடந்துள்ளதா என்று பார்த்துவிட்டு தான் பலனை சொல்லுபவன்.

சோதிட புத்தகத்தில் போட்டுள்ள அனைத்தும் அப்படியே நடந்துவிடாது. ஒரு சிலருக்கு நடக்கலாம். ஒரு சிலரின் ஜாதகங்களில் பனிரெண்டாவது வீட்டில் கேது இருந்த ஜாதகத்தை பார்த்துள்ளேன். அவர்கள் அந்தளவுக்கு நன்மை செய்தவர்களாக இல்லை.

கேது மட்டும் மோட்சத்தை கொடுப்பார் என்று நான் நினைக்கவில்லை நீங்கள் சொல்லுவது போல் புண்ணியம் மற்றும் பாக்கிய வீடு எல்லாம் சேர்ந்து மோட்சத்தை கொடுக்கலாம். மோட்சத்தைப்பற்றி பல பதிவுகளில் நான் சொல்லிருந்தாலும் இனிமேலும் வரும் பதிவுகளில் நான் சொல்லுகிறேன் படித்து பாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: