Followers

Wednesday, December 3, 2014

சோதிட அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                      சனிக்கிரகத்தைப்பற்றி நிறைய செய்திகள் உங்களுக்கு தெரியும். இந்த செய்தியையும் உங்களுக்கு சொல்லுகிறேன் தெரிந்துக்கொள்ளுங்கள்.

லக்கினாதிபதி ஆறாவது வீட்டில் இருந்தால் அவர்கள் பெரும்பாலும் நோயுடன் அல்லது கடனுடன் வாழ்க்கையை நடத்துபவர்களாக இருப்பார்கள். வாழ்க்கை முழுவதும் பெரும் போராட்டத்தை சந்திப்பவர்களாக இருப்பார்கள்.

சனிக்கிரகம் லக்கினாதிபதியாக அமைந்து ஆறாவது வீட்டில் அமர்ந்தால் பெரும்பாலம் நான் சந்தித்த நபர்கள் அனைவரும் மிகப்பெரிய பணக்காரர்களாக இருக்கின்றார்கள். இவர்களுக்கு கடன் தொந்தரவும் இல்லை வியாதியும் இல்லை.

பணக்காரர்களாக இருந்தால் கடன் எப்படி இருக்கும் என்று நினைக்கவேண்டாம். இன்றைய காலத்தில் பணக்காரர் போல் வெளியில் காட்டவேண்டும் என்று வேஷம் போடுபவர்கள் அதிகம் பேர் இருக்கின்றார்கள். பணக்காரர் என்று காட்டுவதற்க்கு பல இடங்களில் கடன் வாங்குகிறார்கள்.

சனிக்கிரகம் மறைவு இடத்தில் அதே நேரத்தில் ஆறாவது இடத்தில் இருந்தால் நல்ல வசதியோடு வாழவேண்டும் என்பதற்க்காக கூட இப்படி இருக்கலாம். உங்களுக்கு சனி ஆறில் இருந்தால் கவலைப்படாமல் சந்தோஷமாக இருங்கள். நீங்கள் கோடிஸ்வரர் தான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: