Followers

Monday, December 22, 2014

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                      ஒரு சாதாரணமான மனிதன் ஏன் சக்தியை இழக்கிறான் என்பதைப்பற்றி பார்க்கலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் சிறிதளாவது சக்தி இல்லாமல் இருக்காது. ஒரு மனிதன் இறக்கவேண்டும் என்றாலும் அவனுக்கு சக்தி தேவைப்படும்.

இன்றைய பரபரப்பான சூழ்நிலை மனிதனை வேகமாக ஒடவைக்கிறது. வாழ்க்கையில் நிறைய சவாலை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்படி ஒடும் மனிதனுக்கு சக்தி இழப்பு ஏற்படும். இதனை சமாளிக்க ஒவ்வொரு மனிதனின் உடலும் பல்வேறு வழியில் சக்தியை சேரிக்கும். உணவு வழியாக வழிபாடு வழியாக பிரபஞ்சம் வழியாக இப்படி பல்வேறு வழியில் சேகரிக்கும்.

ஒரு மனிதனுக்கு சக்தி வீணாக போவது காமத்தில் தான் என்று நினைத்து அனைத்து ஆன்மீகவாதியும் காமத்தை வேண்டாம் என்று சொல்லுவார்கள். ஆன்மீகத்திற்க்கு காமம் ஒரு தடை என்பது போல் காட்டுவார்கள். காமத்தில் சக்தி வீணாக சென்றாலும் அந்த சக்தியை உடல் வெகு சீக்கிரத்தில் திரும்பி பெற்றுவிடும்.

நீங்கள் அதிகமாக காமத்தில் ஈடுபட்டால் கூட அதில் வெளியாகும் சக்தியை உடல் உணவில் வழியாக பெற்றுவிடும். ஒரு மனிதனுக்கு கவலை என்று ஒன்று ஏற்பட்டால் அந்த மனிதனுக்கு சக்தியை திரும்ப பெறுவது என்பது மிக கடினமான ஒன்று. இன்று பல பேருக்கு கவலை ஏற்பட்டதால் தான் சக்தியை இழக்கிறார்கள்.

உதாரணத்திற்க்கு ஒருவருக்கு கடன் வழியாக கவலை ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவரின் உடல் வெகு சீக்கிரத்தில் சக்தியை இழந்துவிடும். அதனை திரும்ப பெறுவது என்பது அந்த கடனை அடைத்தால் மட்டுமே.

ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றால் அவருக்கு மனதில் கவலை ஏற்பட்டுவிட்டால் அவரும் வெகு சீக்கிரத்தில் தனது சக்தியை இழந்துவிடுவார். கவலையால் தான் சக்தி இழப்பு ஏற்படும்.

இல்லறவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இன்றைய பொருளாதாரம் மற்றும் வாழ்வியல் அதிக சுமைக்கொண்டதாகவே இருக்கின்றது. உங்களுக்கு சக்தி இழப்பு ஏற்படுவது இயல்பு. சந்நியாசி என்ற நிலை ஏற்பட்ட காரணமும் கூட இல்லறத்தின் வழியாக வரும் கவலையால் சக்தி இழப்பு ஏற்படும் அதனை தவிர்க்க வேண்டும் என்ற காரணத்தால் தான் தான் சந்நியாசி ஆகிவிடு நீ சக்தி உடையவனாக மாறிவிடுவாய் என்று வந்தது.

மிக சிறந்த ஆன்மீக குருவாக இருந்தால் உங்களிடம் சொல்லும் வார்த்தை சந்தோஷமாக இருங்கள் என்று சொல்லுவார்கள். ஏன் என்றால் சந்தோஷமாக இருந்தால் உங்களுக்கு சக்தி இழப்பு ஏற்படாது என்ற காரணத்தால் அப்படி சொல்லுவார்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: