Followers

Thursday, December 4, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                                        ஒரு நண்பர் என்னிடம் சார் நீங்கள் தான் கோவிலுக்கு செல்லமாட்டீர்களே ஏன் கோவிலுக்கு சென்றீர்கள் என்று கேள்வி கேட்டார்.

நான் அனைத்து கோவிலுக்கும் ஆன்மீகப்பயிற்சி செய்யும்பொழுது சென்று இருக்கிறேன். அதன் பிறகு கோவிலுக்கு சென்றதில்லை. தற்பொழுது கோவில்களின் நிலை எப்படி இருக்கிறது ஏதாவது மாற்றம் வந்து இருக்கிறதா என்பதற்க்காகவும் செல்கிறேன்.

ஆன்மீகத்தில் முதல் நிலையில் இருப்பவர்களுக்கு கோவில்கள் தேவைப்படும் கோவில்கள் இல்லாமல் கற்பிக்கமுடியும். முதல் நிலையில் ஒருவர் என்னோடு இணைந்துள்ளார். அவருக்கு இப்படி காண்பிக்கும்பொழுது அவராகவே இதில் இணைந்துவிடுவார்.

என்னோடு வருபவர்க்கு நான் ஆன்மீகவாதி என்று கூட தெரியாது. அவரை அனைத்து கோவிலுக்கும் முடிந்தளவு நான் கூப்பிட்டு செல்கிறேன். அப்படி அந்த கோவில்கள் வழியாக ஏதாவது ஒரு மாற்றத்தை அவருக்கு இறைவன் நடத்துவார். அவராகவே அதனைப்பற்றி தெரிந்துக்கொள்ள நினைப்பார். 

இந்த காரணத்திற்க்காக மட்டுமே தற்பொழுது நிறைய கோவில்களுக்கு சென்றுக்கொண்டிருக்கிறேன். நமது பழக்கம் ஒருவருக்கு கற்றுக்கொடுக்கிறேன் என்றால் அவரை என்னோடு அனைத்து இடத்திற்க்கும் அழைத்து சென்று காண்பிப்பேன். நூறு சதவீதம் பிராடிக்கல் வகுப்பாகவே அது அமையவேண்டும் என்பதற்க்காக இப்படி செய்வேன்.

எதனையும் என் வாயில் இருந்து சொல்லிக்கொடுப்பதில்லை அதுவாகே நடைபெறவேண்டும் என்பதற்க்கு இப்படி செய்வது உண்டு. என்னோடு வருபவர்க்கு நான் யார் என்று தெரியாது ஆனால் நான் ஆன்மீகத்தை அவருக்கு கற்றுக்கொடுக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: