Followers

Tuesday, December 2, 2014

நம்பிக்கை


வணக்கம் நண்பர்களே!
                      என்னிடம் வரும் நண்பர்கள் பேசும்பொழுது ஒரு சில விசயங்களை நான் கண்காணிப்பேன். ஒவ்வொரு மனிதர்களுக்கும் நிறைய அவநம்பிக்கை இருக்கிறது.

மனிதனை சந்தேகப்படவேண்டியது தான் ஆனால் ஒரே அடியாக சந்தேகப்பட்டால் நீங்கள் தான் தோல்வியை அடைவீர்கள். ஆன்மீகவாதியாக இருப்பவர்கள் ஏமாற்றுவாதியாக தான் இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்ககூடாது. 

முதலில் ஒன்றை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் நமக்கு வந்த வேலை நடைபெறவேண்டும் என்று நீங்கள் நினைக்கவேண்டும். இந்த விசயத்தில் அனைவரும் தோல்வியை தழுவுகிறார்கள் என்று தான் நான் சொல்லுவேன். 

நமது காரியம் நடந்தால் போதும் என்று நீங்கள் பிறரை வேலை வாங்க கற்றுக்கொள்ளுங்கள். அதனைவிட்டுவிட்டு ஆன்மீகவாதியை சோதனையை செய்ய ஆரம்பித்தால் ஒன்றுமே உங்களுக்கு நடைபெறாமல் போய்விடும். என்னை தேடி வருபவர்களிடம் நான் சொல்லுவது நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்கள் செல்லுங்கள் என்று சொல்லுவேன். பல பேர் இது எப்படி சாத்தியம் என்று நினைத்துக்கொண்டே அவர்கள் வெற்றி பெறுவதை விட்டுவிடுகிறார்கள்.

எல்லாமே ஒருவித நம்பிக்கையில் தான் நடைபெறுகிறது. முதலில் நாம் நம்பிக்கையை வைக்க கற்றுக்கொள்ள வேண்டும். நான் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும்பொழுது நான் என்ன நினைப்பேன் என்றால் இத்தனை லட்சம் மக்கள் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் கிரிவலம் சுற்றுக்கிறார்கள். அந்த நம்பிக்கையின் மீது நான் நம்பிக்கை வைத்து சுற்றினேன். கடவுள் இருக்கிறறா இல்லையா என்ற சோதனை செய்யவில்லை இத்தனை லட்சம் பேரின் நம்பிக்கையை நான் பெறுவதற்க்கு சுற்றினேன். 

உங்களிடம் சொல்லுவது எல்லாம் என்னை பயன்படுத்தி வெற்றி பெறவதற்க்கு வழி என்ன என்று யோசித்து செய்தால் போதும் கண்டிப்பாக நான் உங்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திவிடுவேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: