வணக்கம் நண்பர்களே!
ஒரு மனிதன் பிற மனிதனோடு தொடர்புக்கொள்ள மொழி அவசியமான ஒன்றாக இருக்கின்றது. நமது தாய்மொழியை மட்டும் கற்றால் போதாத ஒன்று. பிற மொழியும் கற்கவேண்டும். பிறமொழியும் கற்கவேண்டும் என்றால் அவருக்கு ராகு தசா நடைபெற வேண்டும் அல்லது ராகுவின் நட்சத்திரம் கொண்டவராக இருக்கவேண்டும்.
ராகு தான் பிறமொழி மீது அதிக ஈடுபாடு கொள்ள வைப்பார். எனக்கு ராகு தசா நடைபெறும்பொழுது பிறமொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிகமான ஆசை ஏற்படுத்திக்கொடுத்தது. அது போல் நானும் கற்றேன். அதன் பிறகு வந்த குரு தசா தாய்மொழி மட்டும் மீது ஈடுபாடு வைத்து பதிவு எழுதவிட்டுவிட்டது. இப்பொழுது கஷ்டப்பட்டு பிறமொழி மீது கவனம் செலுத்துகிறேன். ஏன் என்றால் குரு கிரகம் விடமாட்டேன் என்று சொல்லுகிறார்.
ராகுவை நினைத்துக்கொண்டு பிற மொழியை மீது கவனம் வைத்து பேசுகிறேன். இன்று பிற மொழியை பேசினால் தான் நம்மால் உயரமுடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதனால் நீங்களும் பிற மொழியை கற்றுக்கொள்ளுங்கள்.
எனக்கு ஹிந்தி மொழியை எனது குரு கற்று தந்தார். எனக்கு அந்தளவுக்கு பேசவரவில்லை ஒரளவு பேசுகிறேன். முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன். மலையாள மொழியும் அவர் தான் கற்று தந்தார். எனக்கு அவர் மல்ட்டிபர்பஸ் அனைத்தையும் அவரிடமே இருந்து இலவசமாக கற்றுக்கொள்ளலாம்.
உங்களுக்கு ராகு தசா நடந்தால் விரைவாக பிறமொழியை எளிதில் கற்றுக்கொள்ளலாம்.ஒருவருக்கு ராகு தசா நடைபெறும்பொழுது பிறமொழி மீது காதல் ஏற்படும்.
பிற மொழியில் உள்ளவர்கள் உங்களோடு பழக ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களிடம் நீங்கள் வேறு வழியின்றி பேச ஆரம்பித்துவிடுவீர்கள். இப்படி தான் ஒருவருக்கு ராகு தசா நடைபெறும்பொழுது ஏற்படுத்திக்கொடுக்கும் வாய்ப்புகள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
3 comments:
//உங்களுக்கு ராகு தசா நடந்தால் விரைவாக பிறமொழியை எளிதில் கற்றுக்கொள்ளலாம்.ஒருவருக்கு ராகு தசா நடைபெறும்பொழுது பிறமொழி மீது காதல் ஏற்படும்.//
உண்மை உண்மை.. ராகு திசை வந்து எனக்கு 7 வருடங்கள் (2006) ஆகின்றது. ராகு திசை வந்த பிறகு தான் என்னை ஹிந்தி,குஜராத்தி,தெலுங்கு பேச வைத்தது. அதுவரையிலும் தமிழ்நாட்டில் இருந்த என்னை ராகு வந்ததும் தூக்கி குஜராத்தில் போட்டு விட்டார். திரும்பவும் தமிழ்நாடு எப்போது வருவோம் எனறு காத்திருக்கிறேன். ஓரு வேளை ராகு திசை முடிந்த பிறகு தான் வரமுடியுமா?
வணக்கம் தங்களின் கருத்துக்கு நன்றி
Post a Comment