வணக்கம் நண்பர்களே !
நமது ஜாதககதம்பத்தில் இது ஆயிரமாவது பதிவு. நான்கு வருடங்கள் எழுதி இப்பொழுது தான் ஆயிரமாவது பதிவை வந்திருக்கிறேன். முதல் இரண்டு வருடங்கள் ஒன்றும் பெரிதாக எழுதவில்லை. கடந்த வருடத்தில் இருந்து தான் அதிகமான பதிவுகளை தந்துக்கொண்டிருக்கின்றேன்.
நான் எழுதுவதையும் ஏற்றுக்கொண்டு என்னுடைய பதிவை தினமும் வந்து படித்துவிட்டு அதனை பிற நண்பர்களிடமும் தெரிவித்த உங்களுக்கு தான் முதல் நன்றியை தெரிவிக்க வேண்டும். என்னை தேடி வரும் நண்பர்கள் எல்லாம் எனது நண்பர் உங்களின் வெப்முகவரியை தந்தார் என்று சொல்லிக்கொண்டு வரும்பொழுது இந்த தளத்திற்க்கு உங்களின் உழைப்பு அதிகமாக இருந்து இருக்கின்றது என்றே இந்த வேளையில் சொல்லவேண்டும். அதற்கு அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிவு சிறியதாக இருந்தாலும் அதில் கொடுத்துள்ள செய்தி உங்களை சேர்ந்து இருக்கும் என்று நம்புகிறேன். இந்த வருடத்தில் அதிக பதிவை தந்துள்ளேன். இந்த வருடத்திலேயே ஆயிரம் பதிவு தரவேண்டும் என்று நினைத்துள்ளேன். இறைவன் நல்வழியை தந்தால் கண்டிப்பாக இந்த வருடத்தில் ஆயிரம் பதிவை தந்துவிடலாம்.
ஜாதககதம்பத்தை ஆரம்பித்தவுடன் எனக்கு ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றத்தை தந்து இருக்கிறது. தந்து கொண்டிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். உங்களுக்கு தான் நான் கடமைப்பட்டுள்ளேன். ஏதோ சோதிடத்தை மட்டும் எழுதாமல் உங்களின் ஆத்மாவின் திருப்திக்கும் என்னால் முடிந்ததை தருகிறேன். அதற்கே ஆண்டவன் எனக்கு நல்ல வழியை எல்லாம் ஏற்படுத்தி தருகிறான்.
என்னை வழிநடத்தும் குருவிற்க்கு முதல் நன்றியை சொல்லவேண்டும். அவர் எனக்கு கொடுத்த ஒரு சில நல்ல விசயங்கள் தான் என்னை வழிநடத்திக்கொண்டு சென்றுக்கொண்டு இருக்கிறது. இன்று என்னுடன் முதலில் பேசிய நபரும் அவர் தான். நான் என்ன செய்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு என்ன நடக்கும் என்பதை அவரின் ஞானத்தால் உணர்ந்து எனக்கு ஆசி வழங்கி கொண்டிருக்கின்ற அவருக்கு நன்றியை தெரிவித்தால் பத்தாது வேறு வார்த்தை இல்லை என்று நினைக்கிறேன்.
நமது அம்மனின் வழிகாட்டுதல் அதிகமாக இருக்கின்றது அந்த அம்மன் இந்த பதிவு வருபவர்களுக்கு அதிகமான ஆசி வழங்குகிறது என்று தான் சொல்ல வேண்டும். அங்காளபரமேஸ்வரி அம்மன் தொடர்ந்து ஆசியை வழங்கவேண்டும் அதற்கு தான் பூஜைகளை செய்துக்கொண்டிருக்கிறேன்.
வேலூரை சேர்ந்த பாபு நண்பரின் ஆலோசனை பெரிதாக எனக்கு இருக்கின்றது. இந்த வேலையில் அந்த மனிதருக்கு நன்றியை சொல்லியே தீரவேண்டும். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை கூப்பிட்டு எனக்கு ஆலோசனை சொன்ன அந்த மனிதரை பாராட்டியே தீரவேண்டும். பாபு சார் நன்றி சார்.
தமிழ்வெளி மற்றும் தேன்கூடு போன்ற பதிவு திரட்டிகளின் நிறுவனத்தார்க்கும் இந்த வேளையில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மீண்டும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பல சோதிட ஆன்மீக செய்திகளை தரஉள்ளேன், தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
26 comments:
வாழ்த்துகள். தங்களின் சேவை மேலும் தொடரவும், தங்களின் பதிவுகள் பல்லாயிரங்களை தொடவும் இறைவனை வேண்டுகிறேன்.
//* Sudhagar V N said...
வாழ்த்துகள். தங்களின் சேவை மேலும் தொடரவும், தங்களின் பதிவுகள் பல்லாயிரங்களை தொடவும் இறைவனை வேண்டுகிறேன். *//
வணக்கம் தங்களின் வாழ்த்துக்கு நன்றி
வாழ்த்துக்கள் ! தொடர்ந்து பதிவுகள் தந்து உங்கள் இலக்கை
அடைய வேண்டுகிறேன். தொடரட்டும் உங்கள் அரிய பணி .
மிக்க நன்றி !
வாழ்த்துகள்.
Please publish your photos
thanks
Antony
kanyakumari
Congrats and may god bless you to continue this services.
//* ஸ்ரவாணி said...
வாழ்த்துக்கள் ! தொடர்ந்து பதிவுகள் தந்து உங்கள் இலக்கை
அடைய வேண்டுகிறேன். தொடரட்டும் உங்கள் அரிய பணி .
மிக்க நன்றி ! *//
வணக்கம் மேடம். தங்களின் வாழ்த்துக்கு நன்றி
//* antonyarun said...
வாழ்த்துகள்.
Please publish your photos
thanks
Antony
kanyakumari *//
வணக்கம் சார். தங்களின் வாழ்த்துக்கு நன்றி. போட்டோவை போட்டு என்ன செய்ய போகிறோம். தேவையில்லாத ஒன்று. உங்களின் ஆதரவு இருந்தால் போதும். நன்றி
//* rs said...
Congrats and may god bless you to continue this services. *//
வணக்கம் தங்களின் வாழ்த்துக்கு நன்றி.
//* rs said...
Congrats and may god bless you to continue this services. *//
வணக்கம் தங்களின் வாழ்த்துக்கு நன்றி.
வாழ்த்துகள்,
வாழ்த்துகள்,
உங்கள் சேவை மேலும் மேலும் தொடர வேண்டுகிறேன்.
//* தமிழ்செல்வன் said...
வாழ்த்துகள்,
வாழ்த்துகள்,
உங்கள் சேவை மேலும் மேலும் தொடர வேண்டுகிறேன். *//
வணக்கம் தங்களின் வாழ்த்துக்கு நன்றி
வாழ்த்துக்கள்
//* dreamwave said...
வாழ்த்துக்கள் *//
வணக்கம் தங்களின் வாழ்த்துக்கு நன்றி சார்.
Vazthugal.
Thodarattum ungal pani.
-Surya
ஆயிரமாவது பதிவுக்கு
இனிய வாழ்த்துகள்..!
vazhthukkal. please keep writing i wish and pray god to motivate u to achieve 1000 post this year. sure
//* Surya Narayanen S said...
Vazthugal.
Thodarattum ungal pani.
-Surya *//
வணக்கம் தங்களின் வாழ்த்துக்கு நன்றி
//* இராஜராஜேஸ்வரி said...
ஆயிரமாவது பதிவுக்கு
இனிய வாழ்த்துகள்..! *//
வணக்கம் தங்களின் வாழ்த்துக்கு நன்றி
//* thamirabaranithenral said...
vazhthukkal. please keep writing i wish and pray god to motivate u to achieve 1000 post this year. sure *//
வணக்கம் தங்களின் வாழ்த்துக்கு நன்றி
Super sir, although I am unable to comment on your blogs, I am reading it regularly.
Looking forward to meet you soon.
//* Suresh Kumar said...
Super sir, although I am unable to comment on your blogs, I am reading it regularly.
Looking forward to meet you soon. *//
வணக்கம் சார். தங்களின் தளம் மிக அருமையான ஒரு தளம். தினமும் நான் படிக்கும் தளம் உங்களுடையது. கண்டிப்பாக சந்திக்கலாம்.
Thanks a lot Sir. Keep up the good work. !!
//* KJ said...
Thanks a lot Sir. Keep up the good work. !! *//
வணக்கம் தங்களின் வாழ்த்துக்கு நன்றி
உங்கள் ஜோதிட சேவை தொடர்ந்து நடக்க மேல்மலையனூர் ஆங்காளபரமேஸ்வரி அருள் புரிவாள்.
--பாலசுப்ரமணியன்.
உங்கள் ஜோதிட சேவை தொடர்ந்து நடக்க மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அருள் புரிவாள்.---பாலசுப்ரமணியன்.
Post a Comment