Followers

Saturday, December 6, 2014

உங்களின் வீடு பகுதி 7


வணக்கம் நண்பர்களே!
                      உங்களின் வீட்டை உங்களின் ஜாதகத்தைக்கொண்டு பார்த்து வருகிறோம். உங்களின் ஜாதகத்தில் நான்காவது வீடு குரு கிரகம் சம்பந்தப்பட்டால் உங்களுக்கு அமையும் வீடு மிக சிறந்த லட்சணம் பொருந்திய வீடாக அமையும்.

உங்களின் வீட்டில் நல்ல தெய்வஅம்சம் குடிக்கொண்டிருக்கும். உங்களின் வீட்டிற்க்கு முன்னோர்களின் ஆசி இருக்கும். முன்னோர்கள் என்றால் பித்ருக்கள் ஆசி இருக்கும்.

உங்களின் வீடு அமையும் இடம் கோவிலுக்கு அருகாமையில் அமையும். அரசாங்க கருவூலகத்திற்க்கு அருகில் அமையும் அல்லது கல்விசாலைகள் அருகில் அமையும். மொத்தத்தில் குரு நான்காம் வீட்டில் சம்பந்தப்படுவது உங்களுக்கு வீட்டால் நல்ல யோகம் கிடைக்கும்.


நண்பர்களே திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளவும். திருப்பூரில் இருந்து இந்த பதிவை தருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Tirupur pidichurukka bro?