வணக்கம் நண்பர்களே!
சனிக்கிரகத்தைப்பற்றி பல்வேறு தகவல்கள் உங்களுக்கு சொல்லப்பட்டாலும் இந்த தகவல் ஆன்மீக அனுபவத்தில் தருவதால் உங்களுக்கு புதுமையாக இருக்கும்.
ஒருவர் சனிக்கிழமை அன்று இறந்தால் அனைத்து மக்களும் சொல்லும் பழமொழி சனி பிணம் தனியாக செல்லாது என்று சொல்லுவார்கள். அவருக்கு கூட்டாக ஒருவரை அவரே அழைத்துக்கொண்டு சென்றுவிடுவார் என்று சொல்லுவார்கள். அதனால் நமது மக்களுக்கு சனிக்கிழமை ஒருவர் இறந்தால் பயந்துவிடுவார்கள்.
ஒருவர் சனிக்கிழமை அன்று இறந்துவிட்டால் அப்பொழுது என்ன செய்வது ஏதாவது வழி இருக்கின்றதா என்று கேட்பவர்களுக்கு சொல்லும் வழிதான் இந்த பதிவு
இறந்தவர் உடலை சுமந்து செல்லம் வண்டி அல்லது பாடையில் ஒரு கோழியை கட்டி தொங்கவிட்டு செல்லவேண்டும். அது சுடுகாடு வரை அது செல்லும் வழியில் கத்திக்கொண்டே செல்லும். அப்படி சென்றால் சனிக்கிழமை செத்தவரோடு அந்த கோழியை துணைக்கு சென்றுவிட்டார் என்று அர்த்தம்.
என்ன இனி சனிப்பிணம் தனியாக செல்லாது என்று நினைக்கிறேன். நமக்கு வரும் எப்படிப்பட்ட பிரச்சினையும் தீர்க்கவும் ஒரு வழியை ஆண்டவன் சொல்லிவைத்திருப்பான். மனிதன் அதனை பயன்படுத்தினால் போதும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment