Followers

Wednesday, March 26, 2014

பிரச்சினையும் தீர்வும் பகுதி 24

 
ணக்கம் ண்பர்களே!
                    பெரும்பாலும் நம்மிடம் இருப்பவர்கள் ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு தொந்தரவை தருகிறார்களே என்று நினைக்க தோன்றும். என்னிடம் சோதிடம் பார்ப்பவர்களும் கேட்கும் கேள்வி எனக்கு ஏன் இந்த நபரால் பிரச்சினை வருகிறது என்று இருக்கும்.

இவர்களுக்கு ஒரு வரியில் நான் பதில் சொல்லுவது என்றால் அனைத்தும் பூர்வபுண்ணியத்தால் வரும் பிரச்சினை. நாம் முன்ஜென்மத்தில் ஒருவருக்கு செய்த தீயபலன்கள் இந்த ஜென்மத்தில் நமக்கு திரும்பிவருகிறது. அதுவும் சம்பந்தப்பட்ட நபரால் வரும்பொழுது மட்டுமே வருகிறது. நாம் அதிகப்பட்சம் முன்ஜென்மத்தில் உள்ள நபர்களை தேடி பிடிக்கவேண்டியதில்லை. உங்களுடன் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கின்றனர். என்ன அவர்கள் உங்களை தொந்தரவு செய்வதால் அவர்களை உங்களுக்கு பிடிக்கவில்லை.

இப்படிப்பட்ட நபர்கள் உங்களை தாக்குவதாக இருந்தால் அவர்களிடம் வீண் சண்டை போடாமல் நீங்களே விலகிச்செல்வது நல்லது. ஏன் என்றால் அவர்களுக்கு நாம் முன்ஜென்மத்தில் பிரச்சினை கொடுத்தோம். இந்த ஜென்மத்தில் அவர்கள் நமக்கு பிரச்சினை கொடுக்கிறார்கள்.

அவர்களை நாம் எதிர்த்துக்கொண்டு நமது காலத்தை வீணாக்காமல் நாம் நம் வழியில் செல்வது நல்லது. நான் அவர்களை எதிர்த்து தான் வாழவேண்டும் என்றால் நீங்கள் இழக்க தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம். சம்பந்தமே இல்லாமல் ஒருவர் உங்களை பிரச்சினையில் மாட்டிவிடுகிறார் என்றால் அவர் தான் பூர்வபுண்ணிய எதிரி என்று அர்த்தம். பிரச்சினையை அமைதியாக கையாளுவதும் ஒரு தனிக்கலை. 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: