Followers

Monday, March 17, 2014

பச்சை பரப்புதல்



வணக்கம் நண்பர்களே!
                    குலதெய்வ பதிவை படித்துவிட்டு பச்சை பரப்புதல் என்றால் என்ன என்று கேட்டு நமது நண்பர்கள் போன் செய்து கேட்டனர். பச்சைப்பரப்புதலைப்பற்றி பழைய பதிவில் எழுதியுள்ளேன். அனைவரும் கேட்டுக்கொண்டதற்க்காக மறுபடியும் இப்பதிவில் பார்க்கலாம்.

நாம் குலதெய்வ வழிபாடு செய்ய குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தாலும் உங்களின் வீட்டில் உங்களின் குலதெய்வத்தை வரவழைத்து அதற்கு பூஜை செய்யும்பொழுது மட்டுமே நீங்கள் கேட்ட வரத்தை உங்களின் குலதெய்வம் தரும். உங்களின் குலதெய்வம் உங்களுக்கு மட்டும் குலதெய்மாக இருக்காது உங்களின் பங்காளிகளுக்கும் அது குலதெய்வமாக இருக்கும்.

இந்த காலத்தில் மக்களின் மனநிலை எப்படி இருக்கின்றது என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. அண்ணன் தம்பி கூட ஒற்றுமையாக இருப்பதில்லை. பொறாமை குணத்தில் இருக்கின்றனர். பங்காளிகளைப்பற்றி நாம் சொல்லவே தேவையில்லை.

பங்காளிகள் என்ன செய்கின்றனர் என்றால் யாராவது ஒரு ஆன்மீகவாதிகளிடம் சென்று குலதெய்வத்தை அவர்களுக்கு மட்டும் செய்வது போல் செய்து விடுகின்றனர். பங்காளிகளில் ஒருத்தர் மட்டும் நன்றாக இருக்கின்றார் மீதி உள்ளவர்கள் அனைவரும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றனர். இப்படி எல்லாம் செய்வது தவறான வழி என்றாலும் அதற்கு துணை போவதும் ஆன்மீகவாதிகளாக தான் இருக்கின்றனர். 

ஒவ்வொருவரின் குலதெய்வத்தின் கதி இப்படி இருக்கின்றது அதற்கு தான் ஒருவர் என்ன செய்தாலும் உங்களின் குலதெய்வம் உங்களுக்கு நல்லது செய்வதற்க்கு பச்சை பரப்புதல் என்ற வழிமுறையை செய்யவேண்டும்.

இந்த பச்சை பரப்புதல் என்பது நான் கண்டுபிடித்த ஒரு செயல் கிடையாது. நமது முன்னோர்கள் செய்து வந்ததை மக்களிடம் கொண்டு சேர்க்கிறேன். உங்களுக்கு முன்னோர்கள் இருந்தால் இதனைப்பற்றி கேட்டீர்கள் என்றால் மிக சரியாக சொல்லுவார்கள். முன்னோர்கள் செய்து வந்ததை காலத்தின் கோலமாக விட்டுவிட்டார்கள் நமது தலைமுறையினர். அதனை மீண்டும் எடுத்து உங்களுக்கு சொல்லுகிறேன்.

உங்களின் வீட்டில் உள்ள பூஜையறையில் விளக்கை ஏற்றி அந்த விளக்கு முன்னாடி ஒரு தலைவாழை இலையை வைத்து பச்சை அரிசியை தண்ணீரில் நனைத்து அந்த அரிசியை எடுத்த இலை முழுவதும் பரப்புங்கள். அதற்கு மேல் ஐந்து உருண்டை மாவிளக்கு பிடியுங்கள். ஐந்து மாவிளக்கிலும் தீபத்தை ஏற்றுங்கள். உங்களின் குலதெய்வத்திற்க்கு எந்த எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் பிடிக்கும் என்பதை பார்த்து அந்த எண்ணெய் பயன்படுத்தலாம் அல்லது நெய் ஊற்றி தீபத்தை ஏற்றலாம். மாவிளக்கில் தீபம் எரியவேண்டும்.

 இலையின் பழங்களை எல்லாம் வைக்கலாம். உங்களின் குலதெய்வத்திற்க்கு என்ன பிடிக்கும் என்பதை பார்த்து செய்து வைக்கலாம். ஒரு சில குலதெய்வத்திற்க்கு அசைவத்தை சமைத்து வைத்து படைப்பார்கள். அவர் அவர்களின் வழிமுறையில் என்ன தேவையோ அதனை வைத்து படைத்துக்கொள்ளுங்கள். மாலை வேளையில் இதனை செய்தால் நல்லது.

மேலும் தகவல் வேண்டும் என்பவர்கள் எனது மொபைல் எண்ணில் தொடர்புக்கொண்டு கேட்டுகொள்ளுங்கள்.

இதுவரை செய்யாதவர்கள் உடனே செய்துவிடுங்கள். ஒரு சில குடுங்களின் மாதம் மாதம் இதனை செய்வார்கள். மூன்று மாதத்திற்க்கு ஒருமுறை கூட இதனை செய்யலாம்.

இதனை செய்வது நமது குடும்பத்தை காப்பாற்றும். எந்த பிரச்சினையும் நமது குடும்பத்திற்க்கு வராமல் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை செய்யலாம்.

கலியுகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்க்கு மிக உகந்தது. வீட்டில் இருக்கும் கன்னி பெண்களுக்கும் இது நல்லது. ஒரு பெண் முறை தவறி செல்லுகிறாள் என்றால் குலதெய்வ அருள் இல்லாமல் மட்டுமே தான். இன்றைக்கு வரும் பிரச்சினைக்கு காரணம் குலதெய்வ அருள் இல்லாமல் போனது ஒரு முக்கிய காரணம். குலதெய்வ அருள் வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை முதலில் செய்வது நல்லது.மீண்டும் மீண்டும் இதனை நான் சொல்லுகிறேன் என்றால் இதில் காரணம் இல்லாமல் இல்லை. உடனே பச்சைப்பரப்புதல் செய்வது நல்லது.



நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

BALA said...

Thanks.Even if we don't know whether we can do and it will help to fine out the family deity Sir, Usually this is like the Mavillakku done in Adi,and Thai months on Fridays .

Kindly let us know the whereabouts of the amman temple so that one can go

Kodai said...

எங்கள் வீடுகளில் இந்த மாவிளக்கு போடும் பழக்கம் கிடையாது என்று எங்கள் மாமியார் கூறிவிட்டார்கள். அதனால் நாங்களும் இதை மீறி எதவும் செய்ய முடியவில்லை. இதற்கு தாங்களே ஒரு நல்ல வழி கூறவும்