Followers

Thursday, March 13, 2014

கேள்வி& பதில்


உணர்ந்தவை
            ஹலோ ராஜேஷ் , எந்த ஒரு பிராத்தனையும் , யாருக்காக பிராத்தனை செய்கிறோமோ அவர்களுக்கு தெரியாமல் செய்யும்பொழுது எந்த அளவுக்கு அது பலனளிக்கும் ?

பிராத்தனை என்பது நாம் கடவுளிடம் வைக்கிறோம் அது சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியவேண்டும் என்பதில்லை. சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிந்தால் அவர் மனதளவில் தன் நம்பிக்கையால் முயற்சி செய்து வெளியில் வருவார் என்ற காரணத்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியப்படுத்துகிறோம்.

பொதுவாக ஒரு தெய்வத்தை வைத்திருப்பவர்கள் தான் செய்யும் பிராத்தனையை சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியப்படுத்தமாட்டார். ஏன் என்றால் அவர் வைத்திருக்கும் தெய்வம் அவருக்கு கண்டிப்பாக செய்துக்கொடுக்கும் அந்த காரணத்தால் அவர் சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியப்படுத்த மாட்டார்.

சாதாரணமாக மனிதர் செய்யும்பொழுது சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியப்படுத்துவார். சாதாரண மனிதர்கள் தெய்வத்தை தன்னுடன் வைத்திருக்கமாட்டார்கள். தெய்வ அருள் மற்றும் நம்பிக்கை சேர்ந்து வரும்பொழுது கூடியவிரைவில் பலனை தரும் என்பதால் இப்படி செய்வது உண்டு.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: