Followers

Saturday, March 1, 2014

குலதெய்வம்


ணக்கம் ண்பர்களே!
                    பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குலதெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம் என்று இரண்டு குலதெய்வங்களை பெண்கள் வணங்குகின்றனர்.

திருமணத்திற்க்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது. பிறந்த வீட்டில் உள்ள குலதெய்வத்திற்க்கு பூஜை நடக்கும்பொழுது அந்த விழாவில் பிறந்த பெண்கள் பொங்கல் வைத்து சாமி கும்பிடுவார்க்ள்.

பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்க்கு வருடத்திற்க்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும்.புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தருவது இந்த பொங்கல் வைத்து வழிபடும் வழிபாடு மட்டுமே.

புகுந்த வீட்டின் குலதெய்வத்தையும் வணங்கவேண்டும்.அபபொழுது இரு குலதெய்வங்களும் சேர்ந்து அவர்களை நன்றாக வாழவைக்கும். குடும்பத்தையும் வளர்ச்சியில் செல்ல வைக்கும்.

இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்க்கு இந்த வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்க்கு திருவிழா காலங்களில் இந்த வழிப்பாட்டை மேற்க்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

BALA said...

Very useful and nice information