வணக்கம் நண்பர்களே!
குரு தசாவைப்பற்றி பார்த்து வந்தோம். பெரும்பாலும் அதில் உள்ள கருத்துக்களை சொல்லிவிட்டேன். இதனை வைத்து நீங்கள் குரு தசாவைப்பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். ஒரு மனிதனுக்கு ஒரு தசா நடைபெற்றால் அந்த தசாவின் நாதனுக்கு தகுந்தவாறு அந்த மனிதனை மாற்றிவிடும் பண்பு இயற்கையாகவே தசாநாதன் அமைத்துக்கொடுத்துவிடுவார்.

ஒரு தசா அந்த மாதிரி உங்களை மாற்றவில்லை எந்த ஒரு மாறுதலும் இல்லை என்றால் கண்டிப்பாக தசாநாதன் உங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று அர்த்தம். தசாநாதனுக்கு தகுந்தவாறு உங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்.
குரு தசாவைப்பொருத்தவரை ஒரு பிராமணர் எப்படி இருப்பார் என்பதை கவனத்தில் கொண்டு அதற்கு தகுந்தவாறு உங்களை மாற்றிக்கொள்வது நல்லது. நான் சொல்லும் பிராமணர் என்பது ஆதியில் உள்ளவர் போல் தற்பொழுது பிராமணரை தேடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கவனத்தில் கொண்டு அதற்கு தகுந்தவாறு உங்களை மாற்றி்க்கொள்ளுங்கள்.
பொதுவாக சாப்பிடும் சாப்பாட்டிலும் தசாநாதனின் செயல் அதிகமாக இருக்கும். தசாநாதனின் உணவு பழக்கவழக்கத்தை தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தவாறு உங்களை மாற்றிக்கொள்வது நல்லது.
பொதுவாக பல பேருக்கு தசாநாதன் வேலை செய்வதில்லை. அவர் வேலை செய்யவில்லை என்றால் எப்படியாவது அவரை வேலை செய்ய வைக்கவேண்டும். அவர் வேலை செய்யவில்லை என்று நாம் இருந்துவிடகூடாது. எந்த ஒரு தசாவும் வேலை செய்யும் என்ன தீயபலன்கள் தருவது போல் செய்துக்கொண்டு இருக்கும்.
குரு தசாவும் அப்படியே தான் வேலை செய்யும். சுக்கிரனின் வீட்டை உடையவர்களுக்கு குரு தசா நடைபெற்றால் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. கும்ப ராசிக்கும் பிரச்சினையை அதிகம் தரும். உங்களின் ஜாதகத்தில் குரு எப்படி இருக்கிறார் என்பதை பொருத்து அதன் பலனை பார்த்துக்கொள்ளுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment