Followers

Friday, March 21, 2014

குருவின் வார்த்தை


ணக்கம் ண்பர்களே!
                    ஒரு சில நண்பர்கள் ஆன்மீகத்தில் ஆவலை தூண்டிவிடுகிறீர்கள் ஆனால் வழியை சொல்ல மாட்டேகிறீர்கள் என்று கேட்டனர். எத்தனையோ பதிவுகளில் வழியை சொல்லியுள்ளேன் கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு குருவை அடைந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளேன்.

ஆன்மீகத்தை குருவோடு இருந்து கற்றுக்கொள்ளவேண்டும். குருவின் பார்வையில் நீங்கள் இருக்கும்பொழுது மட்டுமே அனைத்தும் சாத்தியப்படும் என்று சொல்லியுள்ளேன். அனைத்தும் செய்முறை வழியில் கற்பது போல் தான் இருக்கும்.

குருவோடு இருந்து கற்கும்பொழுது நாம் தெளிவாக அனைத்தையும் இந்த உலகத்தையும் கற்கமுடியும். ஒரு முறை நானும் எனது குருவும் ஒரு கம்பெனி வழியில் சென்றுக்கொண்டிருந்தோம். அப்பொழுது அந்த கம்பெனியில் இருந்து பெண்கள் வெளியில் வந்துக்கொண்டிருந்தார்கள். எனது புத்தி அவரை வைத்துக்கொண்டே அவர் பேசிக்கொண்டு வருவதை கவனிக்காமல் விட்டுவிட்டு அந்த பெண்களை பார்த்துக்கொண்டு ம் மட்டும் சொல்லிக்கொண்டு வந்தேன். உடனே குரு ஒரு வார்த்தை சொன்னார். கறந்த இடத்தை கண் தேடுது, பிறந்த இடத்தை மனம் நாடுகிறது என்று சொன்னார். 

நான் எங்கு பால் குடித்தேனோ அங்கு எனது கண் தேடுகிறது. நான் பிறந்த இடத்தை எனது மனது நாடுகிறது என்ற சித்தரின் பாடல் வழியாக எனக்கு புரியவைத்தார். இது தான் செய்முறையில் கற்பது. எத்தனையோ விசயம் குருவோடு இருக்கும்பொழுது நாம் கற்றுக்கொள்ளமுடியும்.
 
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அந்த நாளில் நடக்கும் விசயத்தைவைத்து நமக்கு ஆன்மீகத்தை கற்றுக்கொடுப்பார். அதனால் தான் ஒரு குருவை நாடி கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறேன். குருவோடு இருக்கும் நாள் தான் நமக்கு அற்புதமான நாள்களாக இருக்கும்.

அந்த வார்த்தையை கேட்டுவிட்டு உடனே நான் புரிந்துக்கொண்டேன். இனிமேல் அவரை வைத்துக்கொண்டு நாம் பார்க்ககூடாது என்று தீர்மானித்துவிட்டேன். வில்லங்க சிஷ்யன் என்பது இதில் இருந்தே புரிந்துக்கொள்ளமுடியும்.  

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: