வணக்கம் நண்பர்களே!
சித்தர்களைப்பற்றி எழுதியவுடன் பதிவுக்கு என்று தனிக்கூட்டம் கூடுகிறது என்று நினைக்கிறேன். நிறைய பேர் சார் உங்களின் பார்வையில் சித்தர்களை படிப்பதற்க்கு இன்பமாக இருக்கின்றது என்றும் சொல்லிருந்தார்கள். இதனைப்பற்றி முன்பே என்னிடம் சொல்லிருந்தால் நிறைய தகவல்களை தந்திருப்பேன். நிறைய பேர் சித்தர்கள் எழுதிய புத்தகத்தை அப்படியே வலையில் எழுதிக்கொண்டு இருக்கின்றனர். இதில் நாம் வேறு ஏன் குழப்பவேண்டும் என்று இருந்துவிட்டேன். இனி எனக்கு தெரிந்த தகவலை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.
ஏன் மனிதனுக்கு சித்தர்கள் பற்றி அதிக ஆர்வம் ஏற்படுகிறது என்று முதலில் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டும். கலியுகத்தில் மனிதன் எப்படி இருப்பான் என்று முன்னரே சொல்லி இருக்கின்றனர். தாடி வைத்துக்கொண்டு ஆன்மீகம் பேசி உங்களை ஏமாற்றுவான் என்று சொல்லிருக்கின்றனர். அப்படிப்பட்ட கலியுகத்தில் சித்தர்கள் மீது இவ்வளவு ஈர்ப்பு வருவதற்க்கு என்ன காரணம்?

ஆசை தான் காரணம். என்ன ஆசை மனிதன் எதை வேண்டுமானாலும் தன் உழைப்பால் பெற்றுவிடுவான் அல்லது திருடியாவது பெற்றுவிடுவான். அப்படிப்பட்ட மனிதன் சித்தரை தேடுகின்றான் என்றால் சும்மா இருக்காது அதில் ஏதோ விசயம் இருக்கின்றது என்று அர்த்தம். அனைத்தையும் பெறமுடியும் என்று நினைப்பவன் சித்தரை பார்க்கவேண்டும் அவர்களின் வழியை பின்பற்ற வேண்டும் என்றால் இல்லாமல் இருக்கமுடியுமா?
மரணம் இல்லாமல் வாழவேண்டும் என்று சித்தர்கள் சொன்ன அந்த வார்த்தைக்காக தேடுகிறான். மரணம் இல்லாமல் வாழவேண்டும். மரணம் என்ற காலன் என்னை நெருங்ககூடாது என்று சொன்ன சித்தர்களை தேடுவது இந்த காரணத்திற்க்காக மட்டுமே.
கலியுகத்தில் எந்த வேலை செய்தாலும் அதில் சுயலாபம் இருப்பதற்க்காக செய்யும் மனிதன் சித்தர்களை தேடுவதிலும் சுயலாபம் இல்லாமல் இருக்காது அல்லவா. சித்தர்களை தேடி மரணம் இல்லாமல் வாழவேண்டும். என்பதற்க்காக சித்தர்களை பற்றி படிப்பது சித்தர்களின் வழியை பின்பற்றுவது இன்னும் இது நீண்டுக்கொண்டே செல்லும்.
அடுத்த பதிவில் பார்க்கலாம்...
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment