Followers

Friday, March 7, 2014

நாடி


வணக்கம் நண்பர்களே!
                    நேற்று நாடியைப்பற்றி சொன்னவுடன் பயந்தார்கள். ஒரு சிலர் கேள்வியும் கேட்டுருந்தனர். இந்த மாதிரி வேலை செய்வது எல்லாம் கோடியில் ஒருவர் தான் செய்வார்கள். யாரும் பயம்கொள்ள தேவையில்லை. ஒரு கெடுதல் செய்தால் அது எப்படி நமது நாடியில் தாக்கும் என்பதைப்பற்றி சொல்லிருந்தேன். நீங்களே உங்களின் ஊரில் உள்ளவர்கள் இப்படி பாதிக்கப்பட்டார்கள் என்றால் அவர்களின் கையை பிடித்து பார்த்துக்கொள்ளுங்கள்.

நல்ல விசயம் தெரிந்தவர்கள் அதாவது நாடியில் நிபுணர்களாக இருந்தால் எந்தவித மந்திர பிரயோகம் இல்லாமல் உங்களை பார்த்தே உங்களின் நாடியை சரிசெய்வார்கள். அதேப்போல் உங்களின் நாடியை தவறாக பயன்படுத்தமுடியும்.

இந்த காலத்தில் நாடியை பார்க்ககூட தெரியாமல் இருக்கும்பொழுது நாடியை எப்படி சரிசெய்வார்கள்? நாடி நமது இதயத்தோடு தொடர்புடையது. ஏதாவது செய்கிறேன் என்று உங்களின் உயிர் கூட போய்விடும் நிலை ஏற்படும். இது எல்லாம் கொஞ்சம் கஷ்டமான சப்ஜெக்ட் ஜாக்கிரதை.

பொதுவாக நாம் ஆன்மீகத்திற்க்கு வரவேண்டும் என்றால் நமது உடலைப்பற்றி நன்றாக தெரியவேண்டும். நமது உடல் ஏன் இப்படி வேலை செய்துக்கொண்டிருக்கிறது என்பதை பற்றி எல்லாம் ஒரு அறிவு வேண்டும். தனியாக இருக்கும்பொழுது உங்களின் உடம்போடு வாழவேண்டும் அப்பொழுது மட்டுமே இதனை பற்றி எல்லாம் அறிய வேண்டும் உங்களின் மனது நினைக்கும்.

என்ன செய்வது மனிதன் இப்பொழுது தனியாக இருக்கவேண்டும் என்றால் உடனே செத்துவிடுவான். சும்மா ஒரு நிமிடம் கூட இருக்கமுடியாது. செல்போன் எப்பொழுது கண்டுபிடித்தார்களோ அன்று முதல் அதனோடு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தனியாக இருந்தால் செல்போனை மறந்துவிட்டு உங்களின் உடலில் என்ன நடக்கிறது என்று கவனிக்க ஆரம்பித்துவிட்டால் போதும் ஆன்மீகம் உங்களிடம் வந்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: