Followers

Thursday, March 13, 2014

களத்திரக்காரகன்


வணக்கம் நண்பர்களே!
                    நேற்று எனது நண்பர் கிஷ்ணப்பசரவணன் சுக்கிரனைப்பற்றி கேள்வி கேட்டுருந்தார். அவரின் வழியாக சுக்கிரனைப்பற்றி ஒரு சில தகவலை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ளலாமே என்று இப்பதிவை அளிக்கிறேன்.

களத்திரகாரகன் என்று அழைக்கப்படும் சுக்கிரன் மட்டும் ஒருவரின் ஜாதகத்தில் நன்றாக அமையவேண்டும் அப்பொழுது தான் அவர்கள் இல்லறவாழ்க்கையில் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். இவர் மட்டும் அடிவாங்கினால் இல்லறசுகம் என்பது கனவு போல் தான் இருக்கும். 

சுக்கிரன் களத்திரம் என்னும் ஏழாம் வீட்டில் அமர்ந்தால் பொதுவாக அந்த நபருக்கு திருமணம் நடைபெறாது. பரதேசி என்று சொல்லுவார்கள் அல்லவா அதுபோல் சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.திருமணவாழ்க்கை நிலைக்காது. திருமணத்தை கொடுப்பவனே திருமணத்தை தரும் வீட்டில் இருந்தால் பிரச்சினை. ஏழில் சுக்கிரன் நின்றால் பொதுவாக அந்த நபருக்கு பலபேர்களோடு கள்ளதொடர்பை ஏற்படுத்தி வைக்கும்.
 
ஒருவருக்கு குரு எப்படி நன்றாக அமையவேண்டுமே அதேப்போல் சுக்கிரனும் நன்றாக அமையவேண்டும். சுக்கிரனின் பங்கு மட்டும் இல்லை இல்லறவாழ்க்கை என்பது கஷ்டம். பொதுவாக ஆன்மீகவாதிக்கு சுக்கிரன் கெட்டு இருக்கும். சந்நியாசியாக போகிறவர்களுக்கு இல்லறம் எதற்க்கு என்பதால் இதனை சொன்னேன். 

சுக்கிரன் பாவிகளோடு சேரும்பொழுது அதிகமாக காதல் தோல்வி ஏற்படுகிறது. சுக்கிரன் எத்தனை கிரகத்தோடு சேர்ந்து இருக்கிறதோ அத்தனை பெண்கள் தொடர்பு ஏற்படும் என்றும் ஒரு சில சோதிடசாஸ்திரம் சொல்லுகிறது.

சுக்கிரன் கெட்டால் வெள்ளிக்கிழமை அன்று ஏதாவது ஒரு அம்மனை வழிப்பட்டுக்கொண்டு வாருங்கள். பிராமணர் பூஜை செய்யாத அம்மனாக இருக்கவேண்டும்.வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை சட்டை அணிந்து வாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

KJ said...

Sir,

I have read some where that Kanjanur agneeswarar temple is famous parikara sthala for Sukran.

If sukran is vargothama at 12th place, how effects would be ?

anandh said...

எனக்கு சுக்கிரன் ஏழாம் இடத்தில் கெட்டு இருப்பதால்

i am going to be a சந்நியாசி ...சந்நியாசி.. சந்நியாசி