வணக்கம் நண்பர்களே!
இந்த பதிவை திருப்பூரில் இருந்து எழுதுகிறேன். நான் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரில் உள்ள காவல்தெய்வத்தை வணங்குவது எனது பழக்கம் இதனை ஏன் இப்படி செய்கிறேன் என்றால் அந்த ஊரில் நமக்கு எந்தவித தொந்தரவும் வரகூடாது என்று செய்வது வழக்கம்.
இந்த தகவலை நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லியுள்ளேன் இருந்தாலும் மறுமுறையும் சொல்லுவது பல பேர்கள் உங்களின் சொந்த ஊரை விட்டு வந்து இருப்பீர்கள் வெளியூரில் வந்து வேலை செய்வீர்கள். நீங்கள் வெளியூரில் இருக்கும்பொழுது அந்த ஊரில் உங்களுக்கு எந்த வித தொந்தரவும் இருக்ககூடாது.
நகரத்தில் எப்படிப்பட்ட பிரச்சினை இருந்தாலும் அந்த ஊரில் உள்ள காவல்தெய்வத்தை நீங்கள் வணங்கிவிட்டால் உங்களுக்கு எந்தவித தொந்தரவும் ஏற்படாது. இதனை நான் என் அனுபவத்தில் இருந்து சொல்லுகிறேன்.
நீங்கள் உங்களின் குலதெய்வத்தையும் வணங்குங்கள் அதே நேரத்தில் நீங்கள் எந்த ஊரில் இருக்கின்றீர்களோ அந்த ஊரின் காவல் தெய்வம் எது என்று பார்த்து வணங்கி வாருங்கள். உங்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.
நான் இப்படி தான் செய்கிறேன். என்னை போல் நீங்களும் செய்து வாருங்கள். உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராமல் காவல்தெய்வம் காக்கும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment