Followers

Wednesday, March 12, 2014

உடனடி நிவாரணம்



வணக்கம் நண்பர்களே!
                    சொந்த வேலை காரணமாக கடந்த ஒரு வாரக்காலமாக வெளியில் இருந்தேன். இன்று தான் சென்னை திரும்பினேன். வெளியூரில் இருந்தாலும் முடிந்தளவு பதிவை தந்துக்கொண்டு தான் இருந்தேன். இப்பொழுது நமக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாகிவிட்டனர். தொடர்ந்து போன் கால்கள் வந்துக்கொண்டு இருக்கின்றன. அனைத்தும் உங்களால் தான். இன்று சென்னை திரும்பி வந்தாலும் உடல் அசதியாக இருந்தது இருந்துக்கூட ஒரு சில நபரை சந்தித்தேன். முடிந்தளவு உங்களை சந்தி்த்து உங்களின் பிரச்சினைக்கு ஏதாவது ஒரு தீர்வை சொல்லிவிடவேண்டும் என்று எப்படியும் சந்தித்து அல்லது போனில் சொல்லிவிடுகிறேன்.

மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் ஏதாவது ஒரு பிரச்சினை என்று வந்தால் உடனே போன் செய்து சார் எனக்கு இந்த பிரச்சினை உடனே தீர்க்கவேண்டும் என்று கேட்கிறார்கள். காலையில் என்னிடம் சொன்னால் மாலைக்குள் பிரச்சினை தீர்ந்துவிடவேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி எல்லாம் நடைபெற்றுவிட்டால் உலகமே என்னை தேடிவந்துவிடும்.

அம்மன் நினைத்தால் உடனே முடித்துக்கொடுக்கும் ஆனால் அம்மன் எப்படி செய்யவேண்டும் என்பதை முடிவு செய்வது குருவின் சட்ட திட்டங்கள் இருக்கின்றன. உடனே எந்த வேலையும் செய்யவிடமாட்டார்கள். அவசரகாலத்தில் மட்டும் செய்ய வைப்பார்களை தவிர எந்த நேரத்திலும் செய்யவிடமாட்டார்கள்.

குரு ஒன்றை கொடுக்கும்பொழுதே இப்படி தான் இருக்கவேண்டும் என்று விதி வகுத்து கொடுப்பார். நமது நண்பர்கள் போனை போட்டுவிட்டு இப்படி ஒரு பிரச்சினை வந்து இருக்கிறது இதனை உடனே சரிசெய்துக்கொடுங்கள் என்று கேட்பார்கள். எப்படி செய்யமுடியும்?

ஒரு வேலை அம்மனை செய்ய வைக்கவேண்டும் என்றால் வரும் நபரிடம் முடிந்தளவு பணத்தை வாங்கவேண்டும் என்பது முதல் விதி. அவனின் கர்மாவை தொலைக்க இது ஒரு வழி. அந்த பணம் முழுவதும் நாங்களே எடுத்துக்கொள்வதில்லை.  செல்ல வேண்டிய இடத்திற்க்கு சென்றுவிடும். நமது நண்பர்கள் எதுவுமே தராமல் உடனே நடக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். நான் என்ன செய்வது ?

முதலில் என்னிடம் வருவதற்க்கு முன்பு அம்மனிடம் பிராத்தனை வையுங்கள். அந்த பிராத்தனை நடைபெறுகிறதா என்று பாருங்கள் நடைபெறவில்லை என்றால் என்னிடம் தொடர்புக்கொண்டு கேளுங்கள்.

இதிலும் நமது நண்பர்கள் வேலையை காட்டுகிறார்கள் அம்மனிடம் நான் பிராத்தனை வைத்துவிட்டேன். நடக்கவில்லை சார் அதனால் உங்களிடம் கேட்கிறேன் என்று ஒரு பொய்யை சொல்லிவிட்டு வருபவர்களும் இருக்கின்றனர். இப்படி எல்லாம் வந்தால் நடந்துவிடும் என்று நினைப்பது தவறு. நான் வந்து உங்களுக்கு வேலை செய்யபோவதில்லை. அம்மன் தான் வேலை செய்யும். ஏதாவது ஏமாற்றுவேலை நடந்தால் திருப்பி அடிக்கவும் தயங்காது. 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

A. Anitha said...

அம்மன்...

குழந்தைகளோ குமரியரோ முதியவரோ வாலிபரோ எவரென்றாலும்...
நல்லவரோ கெட்டரோ எவரென்றாலும்...
ஏழையரோ பண்ணையரோ எவரென்றாலும்...

மனமுருகி
உள்ளமழ (கண் கண்ணீர் அல்ல)...
உதடு தொழ
உள்ளன்போடு
உண்மையாய்
சரணடைந்தால்...
அருள்பாலிப்பார்...

மலைபோன்ற துன்பங்களும்
கடுகாக சிறுத்திட
அருள் புரிவாரே!...


வணங்காமல் நின்றாலும்
நன்மை தான் தர நினைப்பார்...

ஆனால்...
ஏமாற்ற நினைத்தாலோ...
துரத்தியும் அடிப்பார்... தூக்கியும் அடிப்பார்...

வார்த்தையில் வடிப்பது கடினம்...
வணக்கி பாரு புரியும்...

rajeshsubbu said...

வணக்கம் கவிதையாகவே தந்துவிட்டீர்கள். நன்றி