Followers

Thursday, March 27, 2014

பித்ரு தோஷம் & பரிகாரம்


ணக்கம் ண்பர்களே!
                    எப்பேர்பட்ட தோஷத்தையும் நாம் நீக்கிவிடலாம். அதாவது நாம் கஷ்டப்பட்டு பாேராடி வழிப்பட்டு நீக்கிவிடலாம் ஆனால் பித்ரு தோஷத்தையும் நீக்குவது அவ்வளவு சுலபம் இல்லை. ஒவ்வொரு தோஷமும் கடவுளால் நமக்கு தண்டனை வழங்கப்படுகிறது. பித்ரு தோஷம் பிறர்க்கு நாம் செய்த தீவினையால் நமக்கு வரும் ஒரு தாேஷம்.

பிறர் என்று வரும்பொழுது ஒரு ஆத்மாவால் நமக்கு வருவது. ஆத்மா நம்மை பலிவாங்க நினைக்கும். அதாவது ஒரு வேலை என்று நாங்கள் செல்லும்பொழுது மட்டுமே அந்த வேலையில் எப்பேர்ப்பட்ட பிரச்சினை வரும் என்று தெரியும்.

பித்ரு தோஷம் இருப்பவர்களுக்கு நாம் வேலை செய்யும்பொழுது அந்த வேலை காரணமாக நமக்கு பிரச்சினை வரும். எப்படிப்பட்ட பிரச்சினை என்றால் நமக்கு அடிப்படும் அப்படி அடிப்பட்டால் அது வேறு ஒரு ஆத்மாவால் வருகின்றது என்று அர்த்தம்.

உடலில் நல்ல அடிப்படும். அப்பொழுதே தெரிந்துவிடும் சம்பந்தப்பட்ட நபர் எங்கோ சென்று வாங்கி வந்து இருக்கிறான் என்று புரிந்துவிடும். சம்பந்தப்பட்ட நபரை கூப்பிட்டு உனக்கு பித்ரு தோஷம் இருக்கின்றதா என்று கேட்போம் அப்பொழுது அவர்களின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கும்.

பித்ருதோஷத்திற்க்கு நிவர்த்தி செய்ய சொல்லுவோம் அதன் பிறகு அவர்களுக்கு நாம் செய்துக்கொடுப்பது பழக்கம். இதில் ஒரு பிரச்சினை என்ன என்றால் பித்ருக்களுக்கு திதிக்கொடுக்க அவர்களின் பெற்றாேர்கள் உயிரோடு இல்லாமல் இருக்கவேண்டும். அப்பொழுது சம்பந்தப்பட்ட நபர் திதி கொடுக்கலாம். 

மூன்றாவது வீட்டில் வழியாக வரும் பித்ரு தோஷத்திற்க்கு பெரும்பாலும் அவர்களின் பெற்றோர்கள் உயிரோடு இருப்பார்கள். உயிரோடு இருப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட நபர் கொடுக்கமுடியாது. சம்பந்தப்பட்ட நபர் அவர்களின் பெற்றோர்களை கூப்பிட்டு திதி கொடுங்கள் என்று சொன்னாலும் அவர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள். அங்கும் பெரிய பிரச்சினை உருவாகிவிடும். நான் செல்லமுடியாது என்று சொல்லுவார்கள். நாமே தான் அதனை சரிசெய்யவேண்டும்.

கர்மா என்று இருந்துவிடமுடியாது எப்படியாவது இந்த பிறவியில் அதனை நீக்கவேண்டும். இந்த மனித பிறவி எடுத்ததின் நோக்கம் அதனை சரிசெய்வதற்க்கு தான். அனைத்து காரணிகளும் அடைபடும் நேரத்தில் நாம் என்ன செய்யமுடியும்.

ஒரு ஏழைக்கு பசுமாட்டை நாம் தானம் செய்தால் இந்த பிரச்சினையில் இருந்து நாம் தப்பிக்கலாம். பசுமாட்டை குலதெய்வத்திற்க்கும் நாம் தானம் செய்யலாம். கோவிலுக்கு என்று தானம் செய்தால் அந்த மாட்டை பராமரிக்கும் செலவையும் நாம் சேர்த்து தானம் செய்வது நல்லது. ஒரு சிலர் பிராமணர்களுக்கு பசுமாட்டை தானம் செய்யலாம் என்று சொல்லுவார்கள். ஏழை பிராமணர்களாக இருந்தால் நல்லது.

பசுமாட்டை தானம் செய்யும்பொழுது பசு மாடு மற்றும் அது ஈன்ற கன்றுக்குட்டியையும் சேர்த்து தானம் செய்யப்படவேண்டும் அது தான் பழக்கம்.

நான் ஏழையாக இருக்கின்றேன் என்னால் பசுமாட்டை தானம் செய்ய பணம் இல்லை என்பவர்களுக்கு என்று தனியாக பரிகாரம் இருக்கின்றது அதனை சந்தர்ப்பம் வரும்பொழுது உங்களுக்கு சொல்லுகிறேன்.

ஒரு சில ஆன்மீகவாதிகள் அந்த ஆத்மாவிற்க்கு பரிகாரம் செய்து தருகிறேன் என்று சொல்லுவார்கள். ஆத்மாவிற்க்கு பரிகாரம் செய்வது அவர்கள் அவர்கள் தான் செய்யவேண்டுமே தவிர ஆன்மீகவாதிகள் அல்ல. நீங்கள் தான் பரிகாரம் செய்யவேண்டும்.



நீங்கள் செய்த பாவம் உங்களால் கரைக்கப்படவேண்டும் என்பது விதி. நீங்களே அனைத்திற்க்கு வழியை காணவேண்டும். பிறரை நம்பி இந்த மாதிரி காரியங்களை செய்யகூடாது. கடுமையான பித்ருதோஷம் இருப்பவர்கள் உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Unknown said...

பித்ரு தோஷம் நான் ஆராய்ந்த வகையில் அதை போல் ஒரு கொடிய தோஷம் இல்லை என்று தெரிகிறது இதுவரை எந்த ஜோதிடரும் இதை எனக்கு சொல்ல வில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது ..


இதில் கூறியது போலவே என் வாழ்வில் கடந்த ஏழு ஆண்டுகளாக நடக்கிறது என் நண்பர் கூறியது போல் ஞாயிறு மாலை ராகு காலத்தில் சிவாலயம் சென்று என் வயதுக்கேற்ப ஐம்பது நெய் தீபம் ஏற்றுகிறேன் இதிலே சரியாகிவிடுமா வேறு ஏதாவது செய்யவேண்டுமா
..