வணக்கம் நண்பர்களே!
இன்றைய காலம் கலிகாலம் என்பதற்க்கு என்னிடம் சோதிடம் கேட்கும் ஒரு சிலர் கேட்கும் கேள்வியில் இருந்தே நாம் தெரிந்துக்கொள்ளமுடியும்.
ஒரு சில பெற்றோர்கள் அவர்களின் மகளின் ஜாதகத்தை காண்பித்து என்ன கேள்வி கேட்கிறார்கள் என்றால் என் மகள் அமெரிக்கா அல்லது லண்டன் போவாளா அல்லது அந்த நாட்டிற்க்கு விசா கிடைக்குமா என்று கேட்கிறார்கள். சரி மேலை நாட்டுக்கு செல்வதற்க்கு தானே கேட்கிறார்கள் என்று அவர்களின் ஜாதகத்தை வைத்து பார்த்து பதில் சொல்லுவேன்.

ஒரு சில பெண்களின் ஜாதகத்தில் திருமணவாழ்வு பிரச்சினை என்றால் அப்பொழுது அதனைப்பற்றியும் சொல்லுவது உண்டு. பெற்றாேர்களின் கேள்வி என்ன என்றால் விசா கிடைக்குமா என்பதில் தான் இருக்கின்றது. திருமண வாழ்வு எப்படி வேண்டுமானாலும் போகட்டும். மேலை நாட்டு வாழ்வு கிடைக்குமா என்று எதிர்பார்ப்பார்கள். நாம் திருமண வாழ்வு நன்றாக இருக்க அதற்கு வழி சொன்னால் அதனைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.
பணத்தின் மீது தான் மோகம். அவர்களுக்கு நல்ல வழியை ஏற்படுத்த நினைப்பதில்லை. திருமண வாழ்வு இப்படி இருக்கின்றதே அதனைப்பற்றி கேட்காமல் நீங்கள் விசாவைப்பற்றி கேட்கிறீர்களே என்று நான் கேட்பது உண்டு.
என்ன சார் செய்வது அதனால் தான் வெளிநாட்டிற்க்கு சென்று தங்கட்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். வெளிநாட்டிற்க்கு சென்று வெளிவிசயங்களைப்பற்றி தெரிந்துக்கொள்ளட்டும் என்று தான் அனுப்பி வைக்கிறோம் என்பார்கள். வெளிவிசயங்களை வெளிநாட்டிற்க்கு சென்று தான் கற்றுக்கொள்ள முடியுமா என்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கும். அப்படி என்ன தான் வெளிநாட்டில் கற்றுக்கொள்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment