வணக்கம் நண்பர்களே!
நேற்று ஒரு நண்பர் என்னை தொடர்புக்கொண்டு எந்த நாளில் திருவண்ணாமலை கிரிவலம் செல்லலாம் என்று கேட்டார். நானும் திருவண்ணாமலை சென்று பல மாதங்கள் ஆகிவிட்டது அண்ணாமலையார் தான் இவர் வழியாக கூப்பிடுகிறார் என்று நினைத்துவிட்டு விரைவில் ஒரு நாள் கிரிவலம் செல்லவேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.
திருவண்ணாமலை கிரிவலத்தை பற்றி நெட்டில் தேடினால் ஏகாப்பட்ட தகவல்கள் கிடைக்கும். என்னை பொருத்தவரை ஒரு சிலருக்கு ஒரு முறை சென்றால் காரிய வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு பல முறை சென்றால் மட்டுமே காரிய வெற்றி கிடைக்கும்.
பெளர்ணமி அன்று மட்டும் நாம் சென்று கிரிவலம் போகவேண்டும் என்பதில்லை உங்களுக்கு எது வசதியான நாளாக இருக்கின்றதோ அன்று சென்று கிரிவலம் செல்லுங்கள். ஒரு சிலர் தனது சொந்த நட்சத்திரம் வரும் நாளில் கூட கிரிவலம் செல்வார்கள். செல்வவளம் வேண்டும் என்றால் பெளர்ணமி கிரிவலம் செல்லவேண்டும் என்று சொல்லுவார்கள். ஞானம் வேண்டும் என்றால் அமாவாசை அன்று கிரிவலம் செல்லலாம்.
ஒரு சிலர் ஒவ்வொரு கிரிவலத்திற்க்கும் ஒவ்வொரு காரணம் சொல்லுவார்கள் அதனைப்பற்றி எனக்கு அந்தளவுக்கு அறிவு இல்லை. நான் பல தடவை அங்கு கிரிவலம் சென்று இருக்கிறேன். இந்த வருடம் இன்னும் செல்லவில்லை. கூடியவிரைவில் செல்லவேண்டும். ஒரு சிலர் இந்த கிரிவலத்தில் அவர் வருகிறார் இந்த கடவுள் வருகிறார் என்று சொல்லுவார்கள் அதனை மட்டும் நம்பிவிடாதீர்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment