Followers

Monday, March 17, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    நமது நண்பர்கள் அனைவருக்கும் நான் சொல்லும் ஒரு கருத்து ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலைப்பற்றி தலவரலாறு மற்றும் அந்த கோவிலில் என்ன என்ன தெய்வங்கள் இருக்கின்றன என்று நாம் தெரிந்துக்கொள்ளவேண்டும் மற்றும் அங்கு பூஜை முறைகள் எப்படி செய்கின்றனர் என்பதைப்பற்றி கேட்டு தெரிந்துக்கொள்ளவேண்டும்.

நமது அம்மனின் கோவிலை படத்தில் நீங்கள் பார்த்து இருக்கலாம். அம்மன் இருக்கும் இடத்தில் ஒயரிங் வேலை செய்யும்பொழுது ஒரு தவறை செய்து விட்டனர். ஒயரிங் நடக்கும்பொழுது நான் அங்கு இல்லை மறுபடியும் ஒரு மாதம் சென்ற பிறகு பார்த்தபொழுது அந்த தவறை நான் சுட்டி காட்டினேன். 

மறுபடியும் அதனை சரிசெய்ய கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. என்னிடம் பணம் இருந்தாலும் அதனை செய்வதற்க்கு நேரம் வரவில்லை என்று தான் சொல்லவேண்டும். நானும் செய்யவில்லை. ஒரு வருட காலம் அப்படியே இருந்தது.

நண்பர்களாகிய நீங்கள் அனுப்பும் பணம் இப்பொழுது போதுமானதாக இருக்கின்றது. மாதபூஜை மற்றும் தினந்தோறும் அங்கு தீபம் ஏற்றுவதற்க்கு என்று ஒதுக்கி கொடுத்து வருகிறேன். மீதி உள்ள பணத்தை வங்கி கணக்கில் வைத்திருக்கிறேன். வங்கி கணக்கில் வைத்திருப்பதன் நோக்கம் ஒவ்வொரு மாதமும் தடையின்றி பூஜை செய்யப்படவேண்டும் என்பதற்க்காக வைத்திருக்கிறேன். 

அம்மன் இருக்கும் மரத்தில் வெள்ளை கலரில் ஒன்று தெரிகிறது அல்லவா. மின்சாரம் ஒயர் செல்லும் பைப். மூலவர் இருக்கும் இடத்தில் மின்சாரம் வைக்ககூடாது. நமது ஆட்கள் அதில் பைப்பை வைத்து லைட்டையும் போட்டுவிட்டார்கள். இதனை எடுத்து முன்பக்கத்தில் போடவேண்டும் என்று நினைத்திருந்தேன். கடந்த முறை அங்கு செல்லும்பொழுது அதற்கு செலவு இரண்டாயிரம் ரூபாய் ஆகும் என்றார்கள். ஒரு தவறாக செய்து அதற்கு இவ்வளவு பணம் செலவாகிறதே என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். 

இன்று காலையில் பூஜை செய்துவிட்டு வெளியில் கிளம்பினேன். நண்பர் செந்தில்குமார் சிங்கபூரில் இருந்து போன் செய்தார். பூஜைக்கு என்று பணம் அனுப்பியுள்ளேன் என்றார்.

அவர் கோரிக்கை வைத்தார் அதனை நிறைவேற்றவேண்டும் அதன் பிறகு அவர் அனுப்பிய பணத்தில் இந்த வேலையும் செய்துமுடித்துவிடவேண்டும் என்று எண்ணி பணத்தை எடுத்து எனது ஊரில் உள்ளவர்களுக்கு அனுப்பி அந்த வேலையை தொடங்குங்கள் என்று  அனுப்பி வைத்தேன். நாளை அதற்குரிய பொருட்கள் வாங்கி வேலையை செய்துவிடுவார்கள்.அடுத்த வாரம் பூஜையின் பொழுது அந்த இடத்தில் ஒயரிங் பைப் இருக்காது.

அடுத்த வேண்டுகோள் நமது அம்மனின் கோவிலில் அரசமரத்திற்க்கு கீழ் விநாயகர் வைத்துள்ளேன். அதற்கு தென்னகீற்றில் கூரை வைத்து கொட்டகை போட்டுள்ளேன். அதற்கு தென்னகீற்று கொட்டகை இல்லாமல் மாற்று கொட்டகை போட்டு தரமுடியும் என்றால் முயற்சி செய்து போடுங்கள்.

அம்மன் இருக்கும் இடத்திற்க்கு முன்பு அம்மன் படுத்து இருக்கும் கோலத்தில் அம்மன் கோவில் கட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன். அதற்க்கான வேலை இப்பொழுது இருந்து நடந்துக்கொண்டிருக்கிறது. உங்களின் அனைவரின் பணத்தோடு தான் இதனை செய்யபோகிறேன். அதிக செலவு ஆகும் என்பதால் கொஞ்சம் காலம் எடுத்துக்கொண்டு செய்வோம். தனி நபர் நிறைய பேர் என்னிடம் தனியாக கட்டுகிறேன் என்று வருகிறார்கள். ஒருவர் மட்டும் கட்டவேண்டாம் என்று நினைக்கிறேன். அனைவரும் சேர்ந்து கட்டினால் அதற்கு பலன் அதிகம். பார்க்கலாம்.

அம்மன் கோவிலைப்பற்றி ஒன்று சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். காசி செல்லலாம். கைலாயம் செல்லலாம், திருப்பதி செல்லலாம் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் ஆனால் ஒரு முறை அம்மனின் கோவில் இருக்கும் இடத்திற்க்கு சென்றால் உங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை என்று தோன்றும்.

மிகபெரிய சக்தி உள்ள இடம். ஆன்மீகவாதிகள் எல்லாம் பயிற்சி செய்ய அந்த இடத்திற்க்கு சென்றால் போதும். நீங்கள் நினைப்பதை அடையமுடியும்.ஆத்மாவிற்க்கு சந்தோஷம் கிடைக்கவேண்டும் என்றால் அந்த இடத்திற்க்கு சென்றால் போதும். வந்து பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: