வணக்கம் நண்பர்களே!
நாம் பிறர்க்கு நன்மை செய்வதற்க்காக நிறைய வழிமுறைகளை பின்பற்றினாலும் ஒரு சில நேரங்களில் சித்தர்களின் வழியையும் பின்பற்றுவது உண்டு. சித்தர்களின் வழியில் தான் மூலிகைகளை அதிகம் பயன்படுத்துவார்கள். நானும் அவ்வப்பொழுது பயன்படுத்துவது உண்டு.
நாம் பிறர்க்கு நன்மை செய்வதற்க்காக நிறைய வழிமுறைகளை பின்பற்றினாலும் ஒரு சில நேரங்களில் சித்தர்களின் வழியையும் பின்பற்றுவது உண்டு. சித்தர்களின் வழியில் தான் மூலிகைகளை அதிகம் பயன்படுத்துவார்கள். நானும் அவ்வப்பொழுது பயன்படுத்துவது உண்டு.
மூலிகை பயன்படுத்துவதற்க்காக நான் சித்தர் கிடையாது. உங்களை பாேல் சராசரியான ஒரு மனிதன். இதனை நான் சொல்லிவிடவேண்டும் இல்லை என்றால் என்னையும் சித்தர் என்று அழைக்க ஆரம்பித்துவிடுவீர்கள். தமிழ்நாட்டில் நெற்றியில் விபூதி பட்டையை அடித்தாலே அவர்க்கு என்று ஒரு ஆன்மீக ரசிக மன்றம் உருவாகிவிடும். அதனால் சொல்லிவிட்டேன்.
இப்பொழுது சராசரி மனிதனுக்கும் ஒரு பெரிய ஆசை என்ன என்றால் எப்படியாவது ஒரு சித்தரை தரிசனம் செய்துவிடவேண்டும் என்ற ஆசை தான் அது. இது ஆன்மீக ஆசை. சித்தரை காண்பதற்க்கு பல மந்திரங்களை ஆன்மீகவாதிகள் மக்களிடம் சொல்லிவருகின்றனர். அது அது அவர்களின் வழி. எனது வழியில் ஒன்றை நான் சொல்லவேண்டும் என்று நினைத்து தான் இதனை தருகிறேன்.
ஆயிரம் மந்திரங்கள் உங்களிடம் இருந்தாலும் உங்களிடம் அம்மன் இருக்கவேண்டும். அம்மன் இருந்தால் தான் உங்களால் சித்தரை தரிசனம் செய்யமுடியும். அம்மன் இல்லை சித்தரை தரிசனம் செய்யமுடியாது.
அம்மன் இல்லை கண்டிப்பாக சித்தர்கள் உங்களிடம் வரமாட்டார்கள். முதலில் அம்மனை எடுத்துவிட்டு பிறகு சித்தரை தரிசனம் காண முயலுங்கள்.இந்த காலத்தில் சும்மா தாடி வைத்துக்கொண்டு நான் சித்தர் என்று சொல்லுவார்கள் அதனை எல்லாம் நம்பாதீர்கள். சித்தர்கள் சூட்சமாக உங்களுக்கு தரிசனம் தருவார்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
3 comments:
உண்மை தான் ஐயா. சக்தி வழிபாடு மிக மகத்துவம் வாய்ந்தது. சாதாரண எங்களுக்கே இப்படியென்றால் ஞானிகள் சித்தர்கள் ஆன்மீகவாதிகள் போன்ற மனதையும் மூச்சையும் அடக்க இயன்ற பெரியோர்களுக்கு? சொல்லவா வேண்டும்.
ஒரு சிறியவளின் சந்தேகம்
ஐயா!
எனக்கு தற்போது வயது 27. சிறு வயதில் இறை வழிபாட்டின் நன்மைகளை அனுபவ பூர்வமாக உணர்ந்துள்ளேன். ஆனால் தற்போது என் வாழ்வில் நிகழ்ந்த சிறு பிரச்சனைகளால் நான் மனதை ஒரு நிலைப்படுத்த முயன்றும் மனம் ஆன்மீக வழியிலோ அல்லது மற்ற ஏதேனும் ஒரு வழியிலோ ஒருநிலைப்பட மறுக்கிறது. எத்தனையோ கனவுகளோடு முயற்சிகளோடு வாழ்ந்த பெண்ணை எப்படியோ வாழ்வோம் என தன்னம்பிக்கை இழக்க வைக்கிறது. இந்த நிலையை மாற்றிட என்ன முயற்சி தேவை? (எனக்கு தெரிந்த ஒரே வழி இறைவனைத் துதிப்பது ஒன்றே. அதற்கும் மனம் ஒருநிலைப்பட மாட்டேன் என்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை)
வணக்கம்
தங்களின் ஜாதகத்தை பார்த்தால் என்ன பிரச்சினை என்ற தெரியவரும். உங்களின் சந்தேகங்களுக்கு என்னை தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.
நன்றி
Post a Comment