வணக்கம் நண்பர்களே!
இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் பேராசைக்காக பல தவறான காரியங்களில் இறங்கி தன்னுடைய கர்மாவின் கணக்கில் கூடுதலாக ஏற்றிக்கொள்கிறார்கள். கர்மாவின் கணக்கு அதிகமாகி ஒவ்வொரு நாளும் பிரச்சினை பிரச்சினை என்று சிக்கலில் சிக்கி தவிக்கிறார்கள்.
மனிதனுக்கு இன்று சொகுசாக வாழவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுவிட்டது. சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்றால் அதற்கு பணம் வேண்டும். அதனை சம்பாதிக்க பல வழிகளை பின்பற்றி சம்பாதிக்கிறார்கள். ஒரு சிலர் தவறான பாதையை கையில் எடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். விளைவு பிரச்சினை வந்துவிடுகிறது.
பழைய காலத்தில் உள்ள மனிதர்கள் சொல்லுவார்கள் நீ தவறு செய்தால் உன் குழந்தைகள் கஷ்டப்படுவார்கள் என்று சொல்லுவார்கள். இந்த காலத்தில் யார் தவறு செய்தாலும் அவரே கஷ்டப்படுவார். அவன் அவன் செய்த பாவம் அவனே அனுபவிக்கவேண்டும்.
நீங்கள் ஒரு தவறு செய்து இருந்தால் பிறகு அதே மாதிரி நமக்கு பிறர் வழியாக தொந்தரவு வரும். அப்படிப்பட்ட ஒன்றை நாம் பார்க்கலாம். நாம் பிறரிடம் பணத்தை ஏமாற்றி வாங்கினால் அது மிகப்பெரிய பாவம். ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட உழைப்பின் வேர்வையால் வரும் பணத்தை நாம் திறமையாக ஏமாற்றினால் அவர்களின் ஆத்மா நம்மை சும்மா விட்டுவிடாது.
என்னை இப்படி ஏமாற்றிவிட்டானே என்று நினைக்கும்பொழுது எல்லாம் அவர்களின் ஆத்மா பல வேதனைகளை பெறும். அந்த வேதனைகள் நமக்கு தேடி நாம் எங்கு இருந்தால் வந்து நம்மை பலிவாங்க ஆரம்பித்துவிடும். அதனால் பிறரை ஏமாற்றிவிடாதீர்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment