Followers

Saturday, March 1, 2014

மறுபிறவி பகுதி 4


ணக்கம் ண்பர்களே!
                    மறுபிறவியைப்பற்றி சோதிடத்தில் என்ன சொல்லியுள்ளார்கள் என்று கேட்டேன் இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை. எனக்கு என்னமோ தோன்றுகிறது மறுபிறவியை பற்றி எழுதியவை பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். சரி பரவாயில்லை யாராவது ஒருத்தருக்காவது போய் சேர்ந்தால் போதும்.

ஒரு பிறப்பு எடுத்து அந்த பிறப்பு தவறாக அமையும்பொழுது அடுத்த ஜென்மத்திலாவது நான் நல்லவனாக பிறக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த ஜென்மத்தில் பிறந்த பிறப்பு தவறாக அமைவது எல்லாம் ஒன்று அதுவாகவே அமையும் அல்லது அவர்களாக அமைத்துக்கொள்வார்கள்.

ஒரு உதாரணம் சொல்லுவார்கள். மழை நீர் நல்ல நீரில் விழுவதும் அல்லது கெட்ட நீரில் விழுவதும் விதியின் செயல். இரண்டு நீரிலும் அதிகநாட்கள் தங்கபோவதில்லை. நீராவியாக மாறி மேகத்தோடு தான் கலக்கபோகிறது. மேகத்தோடு கலப்பது நாட்கள் ஆகலாம் ஆனால் கலந்தே தீரும். அதுபோல் மனித ஆத்மாவும் எந்த பிறப்பு எடுத்தாலும் அது கடைசியில் போய் சேரும் இடம் கடவுளாக தான் இருக்கும்.

இறைவனிடம் போய் சேருவதற்க்கு முன்பு பல பிறவிகளை அது எடுக்கிறது. அந்த பிறவிகளைப்பற்றி தான் நாம் மறுபிறவி தொடரில் பார்க்கபோகிறோம்.

யாராவது மறுபிறவியைப்பற்றி சோதிடத்தில் உள்ள தகவல்களை சொல்லுகிறார்களா என்று பார்க்கலாம் அப்படி இல்லை என்றால் நானே சொல்லிவிடுகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

3 comments:

shanthi shri said...

ஒரு ஜாதகத்தில் 12ம் இடத்தில் ராகுவோ, அல்லது கேதுவோ இருந்தால் அவர்களுக்கு அதுவே கடைசி பிறவி என்கிறார்கள். மேலும் 12ல் குரு இருந்தால் அடுத்த பிறவி பிராமணர் குலத்தில் பிறப்பார்கள் என்கிறார்கள் சில ஜோதிடர்கள் இது உண்மையா?

KJ said...

sir,
For people who is having second house dasa and 7th house dasa, you asked to say mrithyunjya mantra. how many times we need to say that? what is the procedure.

Also the are 2 mrinthyunjaya mandtrams. Shall we say both mantras or should say one. please clarify.

antonyarun said...

Thanks for your interest ing topic
How I know my previous birth? Is it possible? Please
Antony