வணக்கம் நண்பர்களே!
லக்கினத்தில் ஒருவருக்கு குரு இருந்து தசா நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது அந்த ஜாதகருக்கு மிகப்பெரிய யோகத்தை தரும் என்று சொல்லலாம். பல பேர்களுக்கு நான் அப்படி நடைபெற்றதை பார்த்திருக்கிறேன்.
லக்கினத்தில் இருந்து குரு அமரும்பொழுது அது பூர்வபுண்ணித்தை தனது ஐந்தாவது பார்வையால் பார்க்கும் மற்றும் ஒன்பதாவது பார்வையாக பாக்கியஸ்தானத்தையும் பார்க்கும் இரண்டு முக்கியமான இடத்திற்க்கு குருவின் பார்வை விழும்பொழுது இரண்டு இடங்களும் தன் பலனை அதிகம் தருகிறது. குரு தசாவின் பொழுது அது அதிகமாக கிடைக்கும். முன்ஜென்மத்தில் இருந்த நல்ல பலனை எல்லாம் இந்த ஜென்மத்தில் கிடைக்க வைத்துவிடும்.
பொதுவாக ஒருவருக்கு நாங்கள் நல்லது செய்வதாக இருந்தால் முன்ஜென்மத்தில் ஏதாவது நல்லது செய்து இருக்கின்றனரா என்று பார்த்து அதில் இருந்து தான் எடுத்து செய்வோம்.அதைப்போல் குரு தானாகவே முன்ஜென்மத்தில் இருந்து வந்த நல்லதை எல்லாம் எடுத்து இந்த ஜென்மத்தில் கொடுத்துவிடுவார்.
லக்கினத்தில் இருந்து தசாவை நடத்தும்பொழுது உடல்நிலையில் கொஞ்சம் கவனம் செலுத்தவேண்டும். லக்கினத்தில் இருந்து தசாவை நடத்துவதால் உடல் அவ்வப்பொழுது பிரச்சினையை கொடுக்கும். குரு அமரும் இடம் பிரச்சினை.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
3 comments:
Kindly write an article about the Guru Dasa ,if in Lagan-say Aris ,Tarus like that and in various stars in that for the benefit of the readers .Thanks
மிதுன லக்னத்திற்கு குரு பாதகாதிபதி அவர்களுக்கு குரு லக்னத்தில் இருந்து திசை நடத்தினால் என்ன நடக்கும்?
Thanks sir,
If guru sits in 7th house, as per your old lessons, it is beneficial as it aspects lagnam. But as per todays lesson, 7th house will get affected and he/she will be having troubles in marriage life? pl explain?
Post a Comment